Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பிரிட்டனின் 2 ஆம் எலிஸபெத் மகாராணி காலமானார்..!



பிரிட்டனின் 2 ஆம் எலிஸபெத் மகாராணி தனது 96 ஆவது வயதில் இன்று வியாழக்கிழமை (08) காலமானார்.

ஸ்கொட்லாந்திலுள்ள பல்மோரல் மாளிகையில் அவர் காலமானார் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

முன்னதாக, அரசி 2 ஆம் எலிஸபெத்தின் (Queen Elizabeth II) உடல்நிலை குறித்து அவரின் மருத்துவர்கள் இன்று காலை கவலை தெரிவித்திருந்தனர்.

அரசி 2 ஆம் எலிஸபெத் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் சிபாரிசு செய்துள்ளனர் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்திருந்தது.

இநநிலையில் அவர் காலமாகிவிட்டார் என பங்கிஹாம் அரண்மனை சற்றுமுன் தெரிவித்துள்ளது.

அரசி 2 ஆம் எலிஸபெத் பிரித்தானிய மற்றும் கனடா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து உட்பட 14 நாடுகளின் அரசு தலைவராக விளங்கினார்.

.தனது தந்தை 6 ஆம் ஜோர்ஜ் மன்னர் மறைவையடுத்து 1952 ஆம் ஆண்டு அரசியாக 2 ஆம் எலிஸபெத் பதவியேற்றார். அப்போது இலங்கை, பாகிஸ்தான் முதலான நாடுகளுக்கும் அவர் அரசியாக விளங்கியமை குறிப்பிடத்தக்கது.

70 வருடங்கள் ஆட்சியலிருந்த அவர் மிக நீண்டகாலம் ஆட்சி புரிந்த பிரித்தானிய ஆட்சியாளராக அவர் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments