ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும்
வகையில், அமீரகத்தின் தூதரகங்கள் மற்றும் தனியார் துறைகளில்
இருக்கும் கொடிகள் மூன்று நாட்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.
அமீரகத்தில் துக்கம் அனுசரிக்கப்படும் காலமானது வெள்ளிக்கிழமை,
செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கியது. இது செப்டம்பர் 12 திங்கள் அன்று
முடிவடையும் என்றும் மொத்தம் மூன்று நாட்களுக்கு துக்கம்
அனுசரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவையொட்டி பிரிட்டனின் அரச
குடும்பம் மற்றும் குடிமக்களுக்கு அமீரகம் இரங்கல் செய்திகளையும்
அனுப்பியுள்ளது. மேலும் அமீரகத்தின் அதிபர், பிரதமர் உள்ளிட்ட அனைத்து
தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments