தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரத்தில் மீனவர்கள் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்வேறு கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 9-ம் தேதி முதல் ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்தப் போராட்டம் 3-வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது. மீனவர்களின் போராட்டத்தால் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 800-க்கும் அதிகமான படகுகள் மீன்பிடிக்கச்செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
10 ஆயிரத்திற்கும் அதிகமான மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் சார்பு தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளனர். எப்போதும் பரப்பாகக்காணப்படும் மீன்பிடி துறைமுகம் தற்போது வெறிச்சோடிக் காணப்படுகிறது. மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 13 ஆம் தேதி தங்கச்சிமடத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
0 Comments