Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

சென்னை: தீபாவளி பண்டிகையொட்டி அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்...!

 

அரசு விரைவு பேருந்துகளில் தீபாவளி பண்டிகைக்கு செல்வோருக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி தலைநகர் சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கான பேருந்துகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளன. அதிலும் தீபாவளியை ஒட்டியே சனி, ஞாயிற்றுக் கிழமையும் வருவதால் இம்முறை 21-ஆம் தேதியே பலரும் சொந்த ஊருக்குச் செல்லத் திட்டமிடுவார்கள். இதையடுத்து, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில், தீபாவளி பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இன்று முதல் தொடங்குகிறது.



www.tnstc.com என்ற இணையதத்தின் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் எனவும் இதேபோல் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் கவுண்டர்களிலும் முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீபாவளிக்கு இருநாட்களுக்கு முன்பு கோயம்பேட்டிலும் சிறப்புக் கவுன்டர்கள் அமைக்கப்பட உள்ளது.

Post a Comment

0 Comments