Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

மகாராணி எலிசபெத் நேற்று உலகிற்கு விடை கொடுத்தார்...!

 

பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத் நேற்று உலகுக்கு விடை கொடுத்தார். மகாராணியின் இறுதிக் கிரியைகள் மிகவும் உணர்வு பூர்வமாக லண்டனில் நடைபெற்றன. ஆறாம் ஜோர்ஜ் நினைவு தேவாலயத்தில் கணவர் எடின்பரோ கோமகனுடன் எலிசபெத் மகாராணி ஒன்றாக நேற்று அடக்கம் செய்யப்பட்டார்.

விண்ட்சர் கோட்டையில் ‘பைப்பர் கீதம்’ இசைக்கவேண்டுமென மகாராணி தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டதற்கிணங்க இதன்போது மகாராணியின் விருப்பத்தின் படி பைப்பர் கீதம்’ இசைக்கப்பட்டது.

நேற்று இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உடல் தாங்கிய பேழை, வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் வைக்கப்பட்டு, இறுதி ஆராதனைகள் நடைபெற்றன.

பிரிட்டனின் மகாராணி இரண்டாவது எலிசபெத் கடந்த 08ஆம் திகதி தமது 96ஆவது வயதில் காலமானார்.

70ஆண்டு காலமாக பிரிட்டனின் மகாராணியாகவிருந்த இரண்டாம் எலிசபெத், மருத்துவ கண்காணிப்பில் இருந்தபோது காலமானதாக பக்கிங்ஹாம் மாளிகை அறிவித்திருந்தது.

அவருக்கு ஸ்கொட்லாந்திலுள்ள பெல்மொரல் மாளிகையில் சிகிச்சையளிக்கப்பட்டது. 26வயதில் பிரிட்டனின் மகாராணியாக முடிசூடிய இரண்டாம் எலிசபெத், 70ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ராணியின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட நேரம் இலங்கை நேரப்படி நேற்றுக் காலை 11மணியுடன் நிறைவடைந்தது.

இறுதி ஊர்வலத்தைக் காணவும், இறுதிச் சடங்குகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதைக் காணவும் லண்டன் நகரில் ஏராளமானோர் குவிந்தனர்.

மகாராணியின் உடலை தாங்கிய பேழை பிரிட்டன் நேரப்படி காலை 11மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு சமய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதற்காக பிரிட்டன் அரசியல்வாதிகள், வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் பெருமளவிலான விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.

03ஆவது சார்ள்ஸ் மன்னருடன் அரச குடும்ப உறுப்பினர்களும் இறுதி ஊர்வலத்துடன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு சென்றனர்.



பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டபின்னர் நேற்றுதிங்கள்கிழமை அரசு மரியாதையுடன் இறுதிக் கிரியைகள் நடைபெற்றன.

நேற்றுக் காலை தனது இறுதிப் பயணத்தை ஆரம்பித்த மகாராணியின் உடல் முதலில் வெஸ்ட்மின்ஸ்டர் அபே கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஆயிரக் கணக்கானோர் முன்னிலையில் ஜெபக்கூட்டம் நடைபெற்றது.

அரச மரியாதையுடன் நடைபெற்ற மகாராணியின் இறுதிச் சடங்கில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து சுமார் 2,000பேர் கலந்துகொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மகாராணியின் உடல் ஊர்வலமாக வின்ட்சர் கோட்டைக்கு எடுத்துச் செல்லப்பட்டு வின்ட்சரிலுள்ள மன்னர் ஐந்தாம் ஜோர்ஜ் ஞாபகார்த்த தேவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

புனித ஜார்ஜ் தேவாலயத்துக்குள்ளே கல்லறை ஜெபத்தில் மிக குறைந்த எண்ணிக்கையிலான தனிப்பட்ட முறையில் நெருக்கமான விருந்தினர்கள் மட்டுமே கலந்துகொண்டதுடன் ஜெபத்தை விண்ட்சர் டீன் டேவிட் கோனர் நடத்தினார். கேன்டர்பரி ஆர்ச் பிஷப் ஜஸ்டின் வெல்பை ஆசி வழங்கினார்.

மகாராணியின் ஆட்சி நிறைவுறுவதைக் குறிக்கும் சம்பிரதாயங்கள் அதன் பின் நடந்தன.

ஏகாதிபத்திய அரச மணிமுடி, மகாராணியின் சிலுவைக் கோளம், செங்கோல் போன்றவை சவப்பெட்டியின் மேலே இருந்து அகற்றப்பட்டு கடைசியாக மகாராணியிடமிருந்த மணி முடி நீக்கப்பட்டது. கடைசி பாடல் இசைக்கப்பட்ட பிறகு மகாராணியின் கம்பனி கேம்ப் கலர், கிரெனேடியர் கார்ட்ஸ் கம்பளம் அல்லது கொடி ஒன்றை சவப்பெட்டியின் மீது அரசர் போர்த்துவது சம்பிரதாயமாகும்.

இறுதியாக எம்.ஐ.05படையின் முன்னாள் தலைவரும் லார்ட் சேம்பர்லெய்னுமான பேரோன் பார்க்கர் தனது அதிகாரக் கோலை உடைத்து சவப்பெட்டியின் மீது வைப்பார். அரச குடும்பத்தில் அரசியின் மிக மூத்த அதிகாரி என்ற முறையில் அரசிக்கான தனது சேவையை அவர் முடித்துக் கொள்வதை இது குறிக்கும்.

பின்னர் ராணியின் உடல் ரோயல் வால்ட்டில் இறக்கப்பட்டதும். மகாராணியின் பைப்பர் இசைப்பார். பிறகு, 'தேவனே அரசனை காப்பாற்று' என்ற கீதம் பாடப்பட்டது. விண்ட்சர் கோட்டையில் பைப்பர் கீதம் இசைக்கவேண்டும் என்பது ராணியே தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்ட கோரிக்கை என்று பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

கல்லறை சேவை முடிவுக்கு வந்து அரசரும், அரச குடும்பத்தினரும் தேவாலயத்தை விட்டு புறப்பட்டனர்.

நேற்று மாலை, குடும்பத்தினர் மட்டும் பங்கு பெறும் ஒரு ஜெபத்துக்குப் பிறகு, புனித ஜார்ஜ் தேவாலயத்துக்குள் இடம் பெற்றுள்ள ஆறாம் ஜார்ஜ் நினைவு தேவாலயத்தில் தனது கணவர் எடின்பரோ கோமகனுடன் மகாராணி ஒன்றாகப் அடக்கம் செய்யப்பட்டார்.

அவரது கல்லறையின் மேலே பதிப்பிக்கப்படும் கல்லில் 'ELIZABETH II 1926-2022' என்று பொறிக்கப்பட்டிருந்தது.

Post a Comment

0 Comments