இந்தியாவின் தளவாடக் கொள்கை குறித்த மத்திய அமைச்சரவையின் முடிவு நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதோடு, உலக வர்த்தகத்தில் நாட்டின் பங்களிப்பையும் அதிகரிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தளவாடத் துறையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் நாட்டின் விவசாயிகள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கு குறிப்பாகப் பயனளிக்கும் என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
அதிக திறன் கொண்ட சோலார் தொகுதிகள் பற்றிய தேசிய திட்டம் தொடர்பான பிஎல்ஐ திட்டம் குறித்த இன்றைய அமைச்சரவை முடிவு, இத்துறையில் உற்பத்தியை மேம்படுத்தும் மற்றும் முதலீட்டை அதிகரிக்கும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
போக்குவரத்து செலவைக் குறைப்பது மற்றும் துறையின் உலகளாவிய செயல்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தேசிய தளவாடக் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments