Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ரஸ்ய தூதுவரை வெளியேற்றுவது குறித்து ஆராய்கின்றது அவுஸ்திரேலியா...!

உக்ரைனிற்கு எதிராக அணுவாயுத தாக்குதல் நடத்தப்படலாம் என ரஸ்யஜனாதிபதி எச்சரித்துள்ளதை தொடர்ந்து அவுஸ்திரேலியா தனது நாட்டிற்கான ரஸ்ய தூதுவரை வெளியேற்றுவது குறித்து ஆராய்ந்து வருகி;ன்றது என வெளிவிவகார அமைச்சர் பெனி வொங் தெரிவித்துள்ளார்.

ரஸ்யா அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் கருத்துக்களை தெரிவிப்பதை அதிகரித்துள்ளதை தொடர்ந்து உக்ரைனிற்கு மேலதிக இராணுவ உதவியை வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்எனினும் பாதுகாப்பு மற்றும் விநியோகங்களில் காணப்படும் பிரச்சினைகளால் ஆயுத உதவியை வழங்குவது பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ரஸ்யாசின் அச்சுறுத்தல் நினைத்துப்பார்க்க முடியாததது பொறுப்பற்றது என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புட்டின் ரஸ்யாவின் ஆள்புல ஒருமைப்பாட்டை பாதுகாப்பதாக தெரிவிப்பது உண்மையில்லை போலியான சர்வஜனவாக்கெடுப்பு எதுவும் அதனை உண்மையாக்காது என குறிப்பிட்டுள்ள பெனி வொங் சட்டவிரோதமான ஒழுக்கக்கேடான யுத்தத்திற்கு ரஸ்யா மாத்திரமே பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

ரஸ்யா உடனடியாக உக்ரைனிலிருந்து தனது படைகளை விலக்கிக்கொள்ளவேண்டும்,உக்ரைனிற்கு எதிரான தனது சட்டவிரோத ஒழுக்கநெறியற்ற ஆக்கிரமிப்பை முடிவிற்கு கொண்டுவரவேண்டு;ம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments