பிரித்தானிய மகாராணியான 2 ஆம் எலிசபெத் அவரது 96 ஆவது வயதில் நேற்று காலமானார்.அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த டூடுல் வழக்கமாக காணப்படும் வானவில் நிறம் கொண்ட கூகுலு எழுத்துகளுக்கு பதிலாக, சாம்பல் நிறத்தில் அவை அமைந்துள்ளன.
தேடல் பட்டியின் கீழ் நினைவு மற்றும் துக்கத்தை அடையாளப்படுத்த ஒரு கறுப்பு ரிபன் இடப்பட்டுள்ளது. குறித்த ரிபன் பிரித்தானியாவிலுள்ள கூகுள் பயனர்களுக்கு மட்டும் தெரியும் வண்ணம் அமைந்துள்ளது.
பயனர்கள் சாம்பல் நித்திலான லோகோவைக் கிளிக் செய்தவுடன், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் தேடல் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
மகாராணி பற்றிய தற்போதைய செய்திகள் மற்றும் சிறந்த தேடல் வினவல்கள் மற்றும் ஒரு சிறு சுயசரிதை ஆகியவை இதில் அடங்கும்.
கூகுளின் தலைமை நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சை ட்விட்டரில் மகாராணிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதில், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு பிரித்தானியா மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என அவர் ட்வீட் செய்துள்ளார்.
அவரது உறுதியான தலைமைத்துவமும் பொதுச் சேவையும் எங்கள் வாழ்நாளில் பலவற்றில் நிலையானது. அவரை நாம் இழந்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
0 Comments