உலகெங்கிலும், குர்ஆனை தங்கள் இதயங்களில் மனனம் செய்து அதை பாதுகாக்க முடிந்தவர்கள் உள்ளனர். புனித நூலை மனப்பாடம் செய்ய இறைவனருள் பெற்ற இளைஞர்களும் முதியவர்களும் உள்ளனர்.
இந்த மக்கள் இறையருள் பெற்றவர்களாக மட்டுமல்லாமல், புனித நூலை மனனம் செய்து அதை தங்கள் இதயங்களில் பாதுகாக்கும் அளவுக்கு கூர்மையானவர்கள். இருப்பினும், மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் கடந்த 2019ம் ஆண்டு புனித குர்ஆனை மனப்பாடம் செய்ததாக நான் உங்களுக்கு சொன்னால் என்ன செய்வது? நீங்கள் உண்மையிலேயே அதிர்ச்சியடைவீர்கள்:
ஒருபோதும் பள்ளிக்குச் செல்லாத ஒரு மனிதன் தனது வாழ்க்கையின் பெரும்பகுதி மருத்துவமனையின் படுக்கைகளில் படுத்துக் கொண்டு உண்மையில் புனித குர்ஆனை மனப்பாடம் செய்திருக்கிறான். சுபஹானல்லாஹ்!
இது உண்மையில் அல்லாஹ்வின் அதிசயம்! 31 வயதான முகமது அப்துல்லா அல் கர்னி, இவரது மனநல குறைவினால் எழுதும் மற்றும் வாசிக்கும் திறன் பாதிக்கப்பட்டது.
அவர் தனது வாழ்க்கையில் ஒருபோதும் பள்ளியில் படித்ததில்லை, ஏனெனில் அவரால் படிக்கவும் எழுதவும் முடியாது என்று கண்டறியப்பட்டது. ஆனாலும், எழுத படிக்க தெரியாத ஒருவர் முழு குர்ஆனை மனனம் செய்து இருப்பது அதிசயமன்றி வேறில்லை.
நாம் மனதளவில் தகுதியுள்ளவர்கள், படிக்கவும் எழுதவும் முடியும், ஆனால் புனித குர்ஆனின் சில வசனங்களை மனப்பாடம் செய்ய நம்மில் பலர் போராடுகிறோம்.
முகமது அப்துல்லாஹ் பற்றி அவரது சகோதரர் கூறுகையில் அவர் ஒரு அனாதை என்றும் பிறவியிலேயே இத்தகைய குறைபாட்டுடன் பிறந்தவர் என்றும் கூறினார். அவர் பிறப்பிலேயே சிறுநீர் குழாய் மற்றும் அதை சார்ந்த பாதிப்புகளுடன் பிறந்ததால், ரியாத்தில் உள்ள கிங் ஃபஹத் மருத்துவ நகரத்தில் மருத்துவ உதவி பெற்றுக் கொண்டிருக்கிறார் என்பதையும் விளக்கினார்.
மேலும், அவரை தான் மட்டுமே கவனித்துக்கொள்வதாகவும், அல் கர்னிக்கு உதவி மற்றும் ஆதரவு தேவைப்படுவதாகவும் அவருடைய சகோதரர் கூறினார்.
அல் கர்னி ஒரு வித்தியாசமான திறன் கொண்டவர், மேலும் இந்த துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களால் மிகுந்த கவனத்துடன் நடத்தப்பட வேண்டும் என்றும் தான் விரும்புவதாக கூறியுள்ளார்.
அவரால் புனித குர்ஆனைக் கற்றுக்கொள்ள முடியுமென்றால், அவர் சமுதாயத்திற்கு வேறு பல விஷயங்களிலும் உதவ முடியும்.
இந்த செய்தியானது பழமையாக இருந்தாலும் மாஷா அல்லாஹ் இந்த சகோதரருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக... ஆமீன்....
ஆதாரம்:
0 Comments