இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்குமாறு கோரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு நேற்று மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார்.
கடந்த 9 மாதங்களில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 150 தமிழக மீனவர்களை, தூதரக நடவடிக்கைகள் மூலம் விடுவிக்க உதவியமைக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அந்த கடிதத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
அத்துடன், புதுச்சேரி மீனவர்கள் உள்ளிட்ட 12 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
தற்போது வரையில், 23 மீனவர்களும், 95 மீன்பிடிப் படகுகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளதுடன், மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும், குறித்த கடிதத்தின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
0 Comments