உலகில் சுமார் 2 பில்லியன் பேர் எளிதில் பாதிக்கப்படக்கூடிய சூழலில் வாழ்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ஒத்துழைப்பு மேம்பாட்டு அமைப்பு அதனைத் தெரிவித்தது.
பூசலால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அந்தப் போக்கு அதிகரித்திருப்பதாக அண்மைய புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
அவற்றால் உலக மேம்பாட்டுக்கும் நிலைத்தன்மைக்கும் ஏற்படும் தாக்கம் குறித்து ஆராயப்படுகிறது.
கொவிட் நோய்ப்பரவல், பருவநிலை மாற்றம், உக்ரைன் போர் ஆகியவற்றால் உலக மக்கள்தொகையில் சுமார் 25 வீதத்தினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எளிதில் பாதிக்கப்படக்கூடிய சூழலில் வாழ்வோர் எண்ணிக்கை 2050ஆம் ஆண்டுக்குள் 3 பில்லியனுக்கு மேல் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது உலக மக்கள் தொகையில் அது சுமார் 32 வீதமாக அங்கம் வகிக்கும்.
0 Comments