கொவிட் பரவல் குறித்து வதந்திகளை பரப்பியதாக தெரிவித்து சீனாவின் தொலைதூர மேற்குபகுதி நகரமான ஜின்ஜியாங்கில் பொலிஸார் இணைய பாவனையாளர்கள் நால்வரை கைதுசெய்துள்ளனர்.
நால்வரையும் யியினிங்கில்ஐந்து முதல் பத்து நாட்களிற்கு நிர்வாக தடுப்பில் தடுத்துவைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவி;த்துள்ளனர்.
இவர்கள் இணையத்தில் வதந்திகளை பரப்பினர் விரோதமான உணர்வுகளை தூண்டினர் தொற்றுநோய் எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஒழுங்கை சீர்குலைத்தனர் இது எதிர்மறையான சமூக விளைவுகளை ஏற்படுத்தியது என பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் எந்த இனத்தவர்கள் என்பதை பொலிஸார் தெரிவிக்கவில்லை ஆனால் இவர்களின் பெயர்கள் ஹான் என ஆரம்பிக்கின்றன.
சிறிய குற்றங்களிற்கு வழமையான நிர்வாக தடுப்பு உத்தரவு பிறப்பிக்கப்படுகி;ன்றது இது முறையான குற்றச்சாட்டுகள் அல்லது விசாரணைகள் அற்ற ஒரு நடவடிக்கை பொலிஸாரின் அனுமதி மாத்திரம் போதுமானது 14 நாட்கள் வரை தடுத்துவைக்கலாம்.ஆபத்து தொற்றுநோய் மற்றும் ஏனைய அவசர நிலை குறித்து வதந்திகளை பரப்புதல் போலி தகவல்களை பரப்புதல் அல்லது வேறு வழிமுறைகளின் மூலம் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை தடை செய்யும் 2006 ம் ஆண்டு பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இவர்கள் நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சு என அழைக்கப்படும் நபர் ஒருவர் பட்டினி காரணமாக நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவலை பரப்பினார் என தெரிவித்துள்ள பொலிஸார் அவருக்கு ஐந்து நாட்கள் தடுப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.கருத்து தெரிவித்தமைக்காக நபர்கள் சிலர் தொண்டர்களால் தாக்கப்பட்டனர் என தெரிவித்த ஜொங் என்பவருக்கு பத்து நாள் தடுப்பி;ல்வைக்கப்பட்டுள்ளார்.
சூ என்ற நபர் இணையத்தை பயன்படுத்தி பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பினை தூண்டினார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இணையம் சட்டத்திற்கு அப்பாற்பட்டது இல்லை,யினிங்கின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தற்போது முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளன,இணைய பாவனையாளர்கள் சைபர் வெளியின் அமைதியை பேணவேண்டும்,வதந்திகளை பரப்பவேண்டும் என பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஜிங்சியாங்கில் கொரோன வைரஸ் சிறிதளவு பரவிவருகின்றது,யினிங்கி;ல் நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தாத 14 நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பரவலை தடுப்பதற்காக நகரங்களை மூடுவதை மத்திய அரசாங்கம் தவிர்;து வருகின்றது - சங்காயில் கொரோனா பரவலை தடுப்பதற்காக கடுமையான முடக்கல் அறிவிக்கப்பட்டதால் ஏற்பட்ட உணவு மருந்து பற்றாக்குறையை தொடர்ந்தே சீன அரசாங்கம் முடக்கல் குறி;த்து தயக்கம் காட்டுகின்றது.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
0 Comments