Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

மேக்ஸ்வெல் விக்கெட்டிற்கு பிறகு தினேஷ் கார்த்திக்கு முத்தமிட்ட ரோகித் ஷர்மா.!

 

மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் க்ளென் மேக்ஸ்வெல்லை ரன் அவுட் செய்ததையடுத்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கின் தலையில் முத்தமிட்டார் கேப்டன் ரோகித் சர்மா.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நேற்று ஞாயிற்று கிழமை நடைபெற்றது. டாஸ் வென்று இந்தியா பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரர் க்ரீன் 19 பந்துகளில் அரைசதம் அடித்து அணிக்கு நல்ல தொடக்கதை கொடுத்தார். அணி 62 ரன்கள் இருக்கும் நிலையில் க்ரீன் அவுட் ஆகி வெளியேறிட களத்திற்கு க்ளென் மேக்ஸ்வெல் வந்தார். அந்த சமயம் ஆஸ்திரேலியா 200 என்ற பெரிய இலக்கை நிர்ணயிக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.



அப்போது மேக்ஸ்வெல் சாஹல் வீசிய பந்தை லெக் சைடில் தட்டிவிட்டு இரண்டு ரன்களை எடுக்க முயற்சித்த போது அக்சர் பட்டேல் அடித்த நல்ல த்ரோவால் மேக்ஸ்வெல் ரன் அவுட் செய்யப்பட்டார். அப்போது பந்து ஸ்டம்பில் அடிக்கும் முன்னரே விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ஸ்டம்பை மோதியிருந்தார். இதனால் முடிவு மூன்றாவது அம்பயரிடம் சென்றது. இதனால் குழப்பமடைந்த ரோகித் சர்மாவை பார்த்து அவுட் என்பது போல கண்ணால் சைகை காண்பித்தார் தினேஷ் கார்த்திக். முடிவில் இரண்டு பெய்ல்ஸ்ஸும் விழாத நிலையில் மேக்ஸ்வெல்லிற்கு அவுட் கொடுக்கப்பட்டது.



மூன்றாவது அம்பயர் விக்கெட் அறிவித்தபிறகு தினேஷ் கார்த்திக் தலையில் முத்தமிட்டார் கேப்டன் ரோகித் ஷர்மா. அந்த காட்சி ரோகித் ஷர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் இருவருக்குள்ளும் உறவு எவ்வளவு அழகாக உள்ளது என்பதை மீண்டும் காட்டியுள்ளது. ரசிகர்கள் அதை ஷேர் செய்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments