Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

உங்கள் மகன் அல்லது மகளை கனடாவுக்கு அழைத்துவர ஸ்பான்சர் செய்வது எப்படி?

 


குடும்ப ஸ்பான்சர்ஷிப் திட்டத்தின் கீழ், ஒரு கனேடிய குடிமகன் அல்லது நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற்ற ஒருவர், வெளிநாட்டிலிருக்கும், தன்னைச் சார்ந்து வாழும், மகன் அல்லது மகளை தங்களுடன் கனடாவில் வாழ வரும் வகையில் ஸ்பான்சர் செய்யலாம். அவருக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற வழிவகை செய்யலாம்.

ஒரு பிள்ளையை ஸ்பான்சர் செய்வதற்கான விதிமுறைகள்:

அந்தப் பிள்ளை, கனடாவில் வாழும் இந்த நபரை சார்ந்திருப்பவராக இருக்கவேண்டும்.

அதாவது, அந்தப் பிள்ளை:

கனேடிய குடிமகன் அல்லது நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற்றவரின் அல்லது அவருடைய துணைவர் அல்லது துணைவியின் மகன் அல்லது மகளாக இருக்கவேண்டும்.

அந்தப் பிள்ளைக்கு திருமணம் ஆகியிருக்கக் கூடாது.

அந்தப் பிள்ளை 22 வயதுக்குக் கீழ் உள்ளவராக இருக்கவேண்டும்.

ஒருவேளை அந்தப் பிள்ளையின் வயது 22க்கு மேல் இருக்குமானால்:


அந்தப் பிள்ளைக்கு தன்னைத்தான் கவனித்துக்கொள்ளமுடியாத வகையிலான உடல் அல்லது மனப் பிரச்சினை இருப்பதுடன்,

22 வயது ஆவதற்கு முன்பிருந்தே நிதி தொடர்பில் பெற்றோரை சார்ந்து வாழும் பிள்ளையாக இருந்திருக்கவேண்டும்.

ஸ்பான்சர் செய்பவருக்கான விதிமுறைகள்

ஒரு பிள்ளையை கனடாவுக்குக் கொண்டு வருவதற்காக நீங்கள் ஸ்பான்சர் செய்ய விரும்பினால், நீங்கள்:

  • 18 வயது அல்லது அதற்கு அதிகமானவராக இருக்கவேண்டும்.

  • ஒரு கனேடிய குடிமகன், கனடாவில் வாழும் நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற்றவர், அல்லது கனடாவின் இந்தியச் சட்டத்தின் கீழ் பதிவு செய்தவராக இருக்கவேண்டும்.

  • உங்கள் அடிப்படைத் தேவைகளையும், உங்களைச் சார்ந்திருக்கும் பிள்ளையின் அடிப்படைத் தேவைகளையும் சந்திக்கும் நிலையில் நீங்கள் இருக்கவேண்டும்.

  • உங்களுக்கும் உங்கள் பிள்ளைக்கும் உள்ள உறவை நிரூபிக்கும் நிலையிலிருக்கவேண்டும்.

  • உங்களுக்கு குற்றப் பின்னணி இருக்கக்கூடாது. 

  • நீங்கள் சிறை சென்றிருக்கவோ, பெரிய குற்றம் சாட்டப்பட்டவாராகவோ, திவால் ஆனவராகவோ இருக்கக்கூடாது.

  • உடற்குறைபாட்டுக்கான உதவி தவிர்த்து வேறு எந்த உதவியும் அரசிடம் இருந்து பெற்றவராக இருக்கக்கூடாது.

  • இந்த விதிகள் கியூபெக்குக்கு பொருந்தாது. கியூபெக் மாகாணத்துக்கென தனி விதிமுறைகள் உள்ளன என்பதை கவனத்தில் கொள்ளவும்.  

Post a Comment

0 Comments