பெண்கள் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே இந்தியா வளர்ச்சி அடையும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக முன்னாள் அமைச்சரின் மகன், 19 வயது பெண்ணை கொலை செய்த விவகாரத்தை சுட்டிக்காட்டி ராகுல்காந்தி இவ்வாறு கூறியுள்ளார். ஹரித்துவாரில் பாஜக முன்னாள் அமைச்சர் வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யாவுக்கு சொந்தமான சொகுசு விடுதியில் வரவேற்பாளராக இருந்த 19 வயது பெண்ணை காணவில்லை என அவரது பெற்றோர் கடந்த திங்கட்கிழமை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அது குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காத நிலையில், சில்லா கால்வாயிலிருந்து அந்த பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி, தனது பாத யாத்திரையில் பல துடிப்பு மிக்க பெண்களை சந்தித்ததாகவும், அவர்களின் பாதுகாப்பே நாட்டின் வளர்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
0 Comments