Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ஆசிய சாம்பியன்கள் நாட்டை வந்தடைந்தனர் - வாகன பேரணி ஆரம்பம்…!


இலங்கை கிரிக்கட் அணியும், ஆசிய சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை வலைப்பந்தாட்ட அணியும் நாட்டை வந்தடைந்தனர்.
 
ஆசிய வலைப்பந்தாட்டப் போட்டியில் 6ஆவது தடவையாக சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை வலைப்பந்தாட்ட அணி இன்று (13) அதிகாலை 12.50 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.



வலைப்பந்தாட்ட அணியை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க வரவேற்றார்.



இதேவேளை, 6வது தடவையாக ஆசிய சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணி இன்று காலை 05 மணியளவில் இலங்கையை வந்தடைந்தது.

 
அவர்களை வரவேற்கும் வகையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட வைபவமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அத தெரண விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டார்.



நாட்டை வந்தடைந்த விளையாட்டு வீரர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வாகன பேரணியில் கொழும்புக்கு அழைத்து வரப்படப்படுகின்றன.
 
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் வாகனப் பேரணி கொழும்பு - நீர்கொழும்பு வீதியில் பேலியகொட சந்தி, மருதானை சந்தி, டார்லி வீதி, யூனியன் பிளேஸ், அலெக்ஸாண்ட்ரா வீதி ஊடாக சுதந்திர மாவத்தையை வந்தடையும். அந்த இடங்களில் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தாய்நாட்டை ஆசியாவின் உச்சியில் உயர்த்தி சர்வதேசப் புகழ் பெற்ற இந்த விளையாட்டு வீர,வீராங்கனைகளை உற்சாகப்படுத்தி தேசியக் கொடியுடன் வரவேற்க பிரதான வீதிகளுக்கு வருமாறு பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வலைப்பந்து சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணி வீராங்கனைகள் நாட்டை வந்தடைந்தனர்.


எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments