Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

சிறந்த தொகுப்பாளருக்கான எம்மி விருது வென்ற ஒபாமா....!

 

எம்மி விருதுகள் (Emmy Award) வழங்கும் விழாவில் சிறந்த தொகுப்பாளருக்கான விருதை பராக் ஒபாமா சுவீகரித்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும் அவரது மனைவி மிச்செல்லும் இணைந்து Higher Ground என்கிற பெயரில் இணைய தொடர் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிறுவனம் 'Our Great National Parks' என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றை தயாரித்தது.

இதில் உலகம் முழுவதும் உள்ள தேசிய பூங்காக்களின் சிறப்பம்சங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 5 பாகங்களாக தயாரிக்கப்பட்ட இந்த தொடரை ஒபாமாவே தொகுத்து வழங்கியுள்ளார்.

இந்த தொடர் கடந்த ஏப்ரல் மாதம் பிரபல OTT தளத்தில் வெளியானது. இந்த நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற எம்மி விருதுகள் (Emmy Award) வழங்கும் விழாவில் சிறந்த தொகுப்பாளருக்கான விருது ஒபாமாவுக்கு வழங்கப்பட்டது.

எம்மி விருது பெறும் இரண்டாவது அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி Dwight D. Eisenhower கடந்த 1956 ஆம் ஆண்டு சிறப்பு எம்மி விருதை பெற்றார்.

ஒபாமா தனது 2 ஆடியோக்களை தொகுத்து வழங்கியதற்காக ஏற்கனவே கிராமி விருதுகளை பெற்றுள்ளார்.

மிச்செல் ஒபாமாவும் தனது ஆடியோ புத்தகத்தை வாசித்தமைக்காக கடந்த 2020 இல் கிராமி விருது வென்றார்.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments