Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ஒரே வார்த்தையில் பிரான்ஸை எதிரியாகிய புதிய பிரதமர் லிஸ் டிரஸ்!

 

பிரித்தானியாவுக்கான பிரதமர் போட்டியில் சரசரவென முன்னேறி வந்தார் இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக்.கடைசியில், அவரது தோலின் நிறத்தாலேயே அவரை ஓரங்கட்டிவிட்டார்கள் கன்சர்வேட்டிவ் கட்சியினர்.

அப்படித்தான் இணையத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. லிஸ் ட்ரஸ்ஸின்(Liz Truss) கொள்கைகள் பிரித்தானியாவை வீழ்ச்சியின் பாதைக்கு அழைத்துச் செல்லும் என எச்சரித்த ரிஷியை(Rishi Sunak) அலட்சியம் செய்து, லிஸ் ட்ரஸ்ஸை(Liz Truss) பிரதமராக்கினார்கள் அவரது கட்சியினர்.

ஆனால், ரிஷி(Rishi Sunak) எச்சரித்ததுபோலவே, 10 ஆண்டுகளில் இல்லாதவகையில், பிரித்தானிய கரன்சியின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.இப்போது, தவறு செய்துவிட்டோம், ரிஷிதான் பிரதமர் பதவிக்கான சரியான ஆள், ஆனால், அவரது தோலின் நிறம் காரணமாக அவர் தோற்கடிக்கப்பட்டுவிட்டார் என்கிறார்கள் மக்கள்.



பிரித்தானியாவின் புதிய பிரதமர் எடுத்து வைத்த முதல் அடியே சறுக்கலாகியிருக்கிறது, அவருக்கு மட்டும் அல்ல, மொத்த பிரித்தானியாவுக்கும், இதற்கிடையில், தவளை தன் வாயால் கெடும் என்பதுபோல, தேவையில்லாமல் வாயை விட்டு பிரான்சுடனான உறவையும் கெடுத்துக்கொண்டுள்ளார் லிஸ் ட்ரஸ்.(Liz Truss)

முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனும்(Boris Johnson), உள்துறைச் செயலர் பிரீத்தி பட்டேலும் நான்கு ஆண்டுகள் திட்டமிட்டு சட்ட விரோத அகதிகளைக் கட்டுப்படுத்துவதற்காக பிரான்சுடன் ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவந்தார்கள்.ஆனால், அதை ஒரே வார்த்தையில் குலைத்துவிட்டார் லிஸ் ட்ரஸ்.(Liz Truss)

பிரித்தானியாவில் பிரதருக்கான போட்டி மும்முரமாக நடந்துகொண்டிருந்த நேரத்தில், பிரான்ஸ் ஜனாதிபதி, நண்பரா எதிரியா என்ற கேள்வி லிஸ் ட்ரஸ்ஸிடம்(Liz Truss) கேட்கப்பட்டது.



அப்போது, மேக்ரான் நண்பரா அல்லது எதிரியா என்பது இன்னமும் முடிவாகவில்லை என்று பதிலளித்திருந்தார் லிஸ் ட்ரஸ். அந்த வார்த்தை பிரான்ஸ் தரப்பில் பெரும் எரிச்சலையூட்டியது.

இந்தப் பெண் லிஸ் ட்ரஸ்(Liz Truss) தன்னை யார் என்று நினைத்துக்கொண்டிருக்கிறாள், இப்படி பேசியதற்கு அவள் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றே ஒருவர் கடுமையாக விமர்சித்தார்.



இந்நிலையில், மேக்ரான் குறித்த லிஸ் ட்ரஸ்ஸின் (Liz Truss)விமர்சனம் இப்போது வேலையைக் காட்டத்துவங்கியுள்ளது.



சட்டவிரோத புலம்பெயர்ந்தோரைக் கட்டுப்படுத்துவதற்காக பிரித்தானியாவுடன் செய்ய இருந்த ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டுவிட்டது பிரான்ஸ்.பிரான்சுடனான ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்ட நிலையில், ஏற்கனவே பொருளாதாரத்துடன் போராடிக்கொண்டிருக்கும் பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கும், புதிதாக பொறுப்பேற்றுள்ள உள்துறைச் செயலருக்கும் மற்றொரு புதிய சவால் தயாராகியுள்ளது, சட்ட விரோத புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பதுதான் அது' என தெரியவந்துள்ளது.

Post a Comment

0 Comments