ஈரானில் ஒரு வாரத்துக்கும் மேலாக அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நீடித்துவரும் நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உறுதி அளித்துள்ளார்.
தற்போது ஈரானின் 31 மாகாணங்களுக்கு பரவியுள்ள இந்த போராட்டங்கள் தொடர்பில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என்று ரைசி கூறினார்.
ஹிஜாப் கட்டுப்பாடுகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மஹ்சா அமினி என்ற பெண் உயிரிழந்ததை அடுத்து வெடித்த இந்த ஆர்ப்பாட்டங்களில் இதுவரை சுமார் 35 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பல நகரங்களில் தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
அமினியின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று ரைசி குறிப்பிட்டுள்ளார்.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
0 Comments