தென் கொரியாவில் ஹலோவீன் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி சுமார் 149 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 76 பேர் காயமடைந்துள்ளனர்.
தென்கொரிய தலைநகர் சோலின் இடோவானில் சனிக்கிழமை (29) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இடோவான் பிரதேசததில் ஹாலோவீன் எனப்படும் பேய் திருவிழா வருடம்தோறும் அக்டோபர் மாத கடைசியில் நடைபெறும்.
கொரோ பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழா நடைபெற்ற நிலையில் பேய் வேடமணிந்த தென் கொரிய மக்கள் இதில் பங்கேற்றனர்.
இந்நிலையில் ஒரு குறுகிய தெருவில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்ததால் சனநெரிசல் ஏற்பட்டது. இதனால் குறைந்தபட்சம 149 பேர் பலியானதுடன் 76 பேர் மேற்பட்டோர் காயமடைந்தததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என சோல் நகர மீட்புப்படைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் உத்தரவிட்டுள்ளார்.
உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளனர்.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
0 Comments