கொரோனா தொற்றால் பல இலட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். அதில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து இன்னும் பல நாடுகள் மீளவில்லை. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டதால் நாடுகள் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனாவை போலவே அச்சுறுத்தும் ‘கோஸ்டா–2’ என்ற புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய வௌவால்களில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் தற்போது பயன்பாட்டில் உள்ள எந்த தடுப்பூசிக்கும் கட்டுப்படாது எனவும், அது விரைவில் பரவ வாய்ப்புள்ளதாகவும் ரஷ்ய விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
0 Comments