Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

6 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு...! (சதொச)


லங்கா சதொச நிறுவனம் உணவுப் பொருட்கள் 6 இனது விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இன்று (19) முதல் அமுலாகும் வகையில் குறித்த விலை குறைப்பு அமுலுக்கு வருவதாக அந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அதற்கமைய, பொதுமக்களின் வறுமையை போக்கும் வகையிலான தேசிய நடவடிக்கைக்கு உதவும் அரச நிறுவனம் எனும் வகையில், தமது பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இவ்வாறு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக சதொச அறிவித்துள்ளது.

அதற்கமைய

  • வெள்ளைப்பு பூடு: ரூ.550 இலிருந்து ரூ. 490 ஆக ரூ. 60 இனால் குறைப்பு
  • கோதுமை: ரூ.375 இலிருந்துரூ.320 ஆக ரூ. 55 இனால் குறைப்பு
  • நெத்தலிக் கருவாடு: ரூ.1,500 இலிருந்துரூ.1,450 ஆக ரூ. 50 இனால் குறைப்பு
  • கடலைப் பருப்பு: ரூ.315 இலிருந்துரூ.285 ஆக ரூ. 30 இனால் குறைப்பு
  • வெள்ளைச் சீனி: ரூ.275 இலிருந்துரூ.260 ஆக ரூ. 15 இனால் குறைப்பு
  • இறக்குமதி வெள்ளைப் பச்சை அரிசி: ரூ.174 இலிருந்து ரூ.169 ஆக ரூ. 5 இனால் குறைப்பு

Post a Comment

0 Comments