Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

`99 குழந்தைகளின் இறப்புக்கு இந்திய இருமல் மருந்தே காரணம்’- இந்தோனேஷிய அமைச்சர்...!



இந்தோனேஷியாவில் 99 குழந்தைகள் உயிரிழப்புக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு
சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இதையடுத்து அனைத்து வகையான சிரப் மற்றும் நீர்ம மருந்துகளின் விற்பனைக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. ஹரியானாவைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரித்த 4 விதமான இருமல் மருந்துகளால் காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.



இதையடுத்து அந்த இருமல் மருந்துகளுக்கு தடை விதிக்குமாறு உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருந்தது. குழந்தைகளுக்கு தீவிர சிறுநீரக பாதிப்பை இந்த இருமல் மருந்துகள் ஏற்படுத்தக்கூடியவை என்று தெரிவிக்கப்பட்டுள்து. இந்தோனேசியாவில் 99 குழந்தைகள் உயிரிழப்புக்கும் இந்த இருமல் மருந்துகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறிய அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர், 206 குழந்தைகளின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நன்றி...
புதிய தலைமுறை

Post a Comment

0 Comments