Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

கேரளாவிலிருந்து கத்தார் ஃபீபா கிண்ணத்தை பார்வையிட தனது காரில் பயணிக்கும் பெண்...!

கத்தார் ஃபீபா கால்ப்பந்துப் போட்டிகள் இன்னும் 3 வாரங்களில் ஆரம்பிக்கவுள்ள நிலையில் உலகமெங்கிலும் உள்ள கால்ப்பந்து ரசிகர்கள் கத்தாரை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். 

அந்த வரிசையில் இந்தியாவின் கோரளா மாநிலம், புதுச்சேரி மாவட்டத்தின் மாஹி நகரத்தைச் சேர்ந்தவர் நாஜி நௌஷி என்ற கால்ப்பந்து ரசிகையும் இணைந்து கொண்டுள்ளனர்.

இவர் ஐந்து குழந்தைகளின் தாயாவர். தனது மஹிந்திரா தார் வாகனத்தில் இந்தியாவில் பயணம் அதனை யூடியுப் மற்றும் ஏனைய பிரபல சமூக வலைதங்களில் பகிர்ந்து வருகின்றார்.



இவரது யூடியூப் தளம் Naajinoushi solo mom traveller என்பதாகும்.

கால்ப்பந்து விளையாட்டின் தீவிர ரசிகையான இவர், கத்தாரில் நடைபெறவுள்ள கால்ப்பந்து போட்டிகளை தனது மஹிந்திரா தார் வாகனத்தில் சென்று பார்வையிட தீர்மானித்து கடந்த 7 நாட்களுக்கு முன்னர் தனது கத்தார் நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

தனது நகரமான மாஹியில் வைத்து உத்தியோக பூர்வமாக பயணத்தை நாஜி நௌஷி தரைவழியாக மும்பை நகர் வரை சென்று அங்கிருந்து, கப்பல்வழியாக ஓமான் செல்லவுள்ளனர். அங்கிருந்து அமீரகம், சவுதி அரேபியா, மற்றும் கத்தார் என மீண்டும் தரைவழியாக பயணத்தை தொடரவுள்ளார்.

இந்த பயணத்திற்கு பல வாரங்கள் செல்லலாம். என்றாலும் முதற்போட்டியைப் நேரடியாகப் பார்வையிடக் கிடைக்காவிட்டாலும், டிசம்பர் 10 திகதியளவில் கத்தாரை சென்றடைய முடியும் என்பதாக தான் எதிர்பர்ப்பதாக நாஜி நௌஷி அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments