கடந்த சில மாதங்களாக கத்தாரில் நிலவி வந்த வெப்பநிலை தற்போது குறைவடைந்துள்ள நிலையில், குடும்பங்களுடன் பயணிக்கும் சிலர் தங்களது குழந்தைகள் விடயத்தில் கவனயீனமாக இருப்பதாகவும், அவர்கள் வாகன மேல் ஜன்னல் (sunroof), மற்றும் பக்க ஜன்னல்களில் குழந்தைகளை விளையாட அனுமதிப்பதாக அறியக்கிடைத்துள்ளதாக கத்தார் ஹமத் வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
இந்த செயற்பாடானது முற்றிலும் தவிர்க்கப்படவேண்டிதொன்றாகும். பெற்றோர்கள் பயணங்களின் போது இது போன்று ஜன்னல்களில் விளையாட அனுமதிக்க வேண்டாம் என்பதாக எச்சரித்துள்ளது.
வாகனங்களில் பயணிக்கும் போது, இருக்கைப் பட்டிகளை கட்டாயம் அணிந்து கொள்ளுங்கள். ஜன்னலுக்கு வெளியால், தலையை காட்டுவது, கையை நீட்டுவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் என்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற விடயங்களுக்கு குழந்தைகளை அனுமதிப்பதானது எதிர்பாராத சம்பவங்களினால் கடுமையான காயங்கள், மற்றும் மரணம் போன்ற பாரதூரமான விளைவுகளை ஏற்படவும் வாய்ப்புக்கள் உண்டு. எனவே தங்களது குழந்தைகள் விடயத்தில் பெற்றோர்கள் கரிசனையுடன் நடந்து கொள்ளுமாறு ஹமத் வைத்தியசாலை கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
THANKS: QATAR-TAMIL
0 Comments