Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

மழை பெய்தால் இங்கிலாந்துக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான போட்டி பாதிக்கும்

ஆப்கானிஸ்தானுக்கும் அயர்லாந்துக்கும் இடையில் மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று நடைபெறவிருந்த ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 1 சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டி சீரற்ற காலநிலை காரணமாக முழுமையாக கைவிடப்பட்டது.

அவுஸ்திரேலிய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவேண்டிய போட்டி மழை காரணமாக 2 மணித்தியாலங்கள் கழித்து கைவிடப்பட்டு இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இந் நிலையில் நடப்பு சம்பயின் அவுஸ்திரேலியாவுக்கும் முன்னாள் சம்பியன் இங்கிலாந்துக்கும் இடையிலான இதே குழுவுக்கான மிக முக்கியமானதும் தீர்மானம் மிக்கதுமான போட்டி இதே மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

ஆனால், அந்தப் போட்டி நடைபெறுமா? இல்லையா? என்பதற்கு இயற்கை அன்னைதான் பதில் சொல்லவேண்டும். ஏற்கனவே இக் குழுவில் நியூஸிலாந்துக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான போட்டியும் கைவிடப்பட்டு இரண்டு அணிகளும் 2 புள்ளிகளைப் பகிர்ந்துகொண்டன.

இன்றைய போட்டியும் கைவிடப்பட்டால் அது அவுஸ்திரேலியாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அவுஸ்திரேலியாவின் நிகர ஓட்டவேகம் மிக மோசமாக இருப்பதே அதற்கு காரணமாகும்.

இங்கிலாந்துக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான இன்றைய போட்டி குறித்த நேரத்திலோ அல்லது தாமதித்தோ விளையாடப்பட்டால் இரண்டு அணிகளும் வெற்றியை குறிவைத்து விளையாடுவதுடன் இரண்டு அணிகளுக்கும் அது கிட்டத்தட்ட நொக் அவுட்டுக்கு ஒப்பான போட்டியாக அமையும்.

கடந்த வருட இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை வெற்றிகொண்டு உலக சம்பியனான அவுஸ்திரேலியா, இந்த வருட ஆரம்பப் போட்டியில் அவ்வணியிடம் தோல்வி அடைந்து பெரும் ஏமாற்றம் அடைந்தது. எனினும் இலங்கைக்கு எதிரான தனது இரண்டாவது போட்டியில் மார்க்கஸ் ஸ்டொய்னிஸின் அதிரடியுடன் வெற்றியீட்டி திருப்தி அடைந்தது.

மறுபுறத்தில் ஆப்பகானிஸ்தானை தனது ஆரம்பப் போட்டியில் 5 விக்கெட்களால் இலகுவாக வெற்றிகொண்ட இங்கிலாந்து, 2ஆவது போட்டியில் அயர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

சுப்பர் 12 சுற்றுடன் வெளியேறாமல் இருப்பதற்கு எஞ்சிய போட்டிகள் அனைத்திலும் இங்கிலாந்து வெற்றிபெற்றாக வேண்டும்.

இதேவேளை, 'நாங்கள் தவறிழைத்துள்ளோம் என்பதை அறிவோம். இதன் காரணமாக நாங்கள் எங்கள் மீதான அழுத்தத்தை அதிகரிக்கச் செய்துள்ளோம். உலகக் கிண்ணத்தில் நிலைத்திருப்பதாக இருந்தால் போட்டியில் வெற்றிபெற வேண்டும். அதில் ஒரு போட்டிதான் இங்கிலாந்துக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலானதாகும்.

இதேபோன்ற நிலையைத்தான் அவுஸ்திரேலியாவும் எதிர்கொண்டுள்ளது.

எனவே இன்றைய போட்டி விளையாடப்பட்டால் இரண்டு அணிகளும் ஒன்றையொன்று வீழ்த்தி வெற்றி புள்ளிகளைப் பெற்று அரை இறுதிக்கான வாய்ப்பை அதிகரித்துக்கொள்ள முயற்சிக்கும்.

அணிகள்:

அவுஸ்திரேலியா: ஆரோன் பின்ச் (தலைவர்), டேவிட் வோர்னர், மிச்செல் மார்ஷ், க்லென் மெக்ஸ்வெல், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், டிம் டேவிட், மெத்யூ வேட், பெட் கமின்ஸ், மிச்செல் ஸ்டார்க், அடம் ஸம்ப்பா, ஜொஷ் ஹேஸ்ல்வூட்.

இங்கிலாந்து: ஜொஸ் பட்லர் (தலைவர்), அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மாலன், பென் ஸ்டோக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோம், ஹெரி ப்றூக், மொயீன் அலி, சாம் கரன், க்றிஸ் வோக்ஸ், ஆதில் ராஷித், மார்க் வூட்.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments