Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ஹேர் ஸ்ட்ரெய்ட்னர் பயன்படுத்துபவர்களுக்கு கருப்பை புற்றுநோய் அபாயம் - ஆய்வில் அதிர்ச்சி...!

பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் கருப்பை புற்றுநோய் பெரும்பான்மையான ஒன்று. கடந்த இருபது ஆண்டுகளில் கருப்பை புற்றுநோய் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் மட்டும் 70 ஆயிரம் பெண்கள் கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தலைமுடியில் அதிக கெமிக்கல் நிறமூட்டிகளை பயன்படுத்துவது மற்றும் குறிப்பாக ஹேர் ஸ்ட்ரெய்ட்னர்களை பயன்படுத்துவது கருப்பை புற்றுநோய் வருவதற்கான அபாயத்தை பலமடங்கு அதிகரிப்பதாக புதிய ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை தெரிவித்திருக்கிறது.

அமெரிக்காவின் வெவ்வேறு வயது மற்றும் இனத்துடன் தொடர்புடைய, தலைமுடிக்கு பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் பயன்பாடு குறித்த புதிய ஆய்வு ஒன்றை வெளியிட்டிருக்கிறது நேஷனல் கேன்சர் இன்ஸ்டிடியூட் ஜர்னல். அதில் தலைமுடிக்கு பயன்படுத்தும் பொருட்களால் பெண்கள் அதிகளவில் கருப்பை புற்றுநோய்க்கு ஆளாவது தெரியவந்துள்ளது. அதிகளவில் கெமிக்கல்களை பயன்படுத்துவது ப்ரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் ஈஸ்ட்ரோஜென் அதிகரிப்பு போன்றவற்றை தூண்டி கருப்பை புற்றுநோய்க்கு வழிவகுப்பதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

image

என்ன சொல்கிறது ஆய்வு?

35 - 74 வயதுக்குட்பட்ட மார்பக புற்றுநோய் அல்லாத அமெரிக்க பெண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பங்கேற்பாளர்களிடமிருந்து, அவர்கள் தற்காலிக, நிரந்தர முடி சாயங்கள், ஹை-லைட்டர்ஸ், ப்ளீச், ரிலாக்சர்கள், ஸ்ட்ரெய்ட்னர்கள் மற்றும் ப்ரெஸ்ஸிங் பொருட்கள் போன்ற 7 முடி சார்ந்த பொருட்களில் எவற்றை எத்தனை முறை பயன்படுத்துகிறார்கள் என்ற தகவல்கள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டன.

பின்னர் இவர்களில் எத்தனை பேருக்கு கருப்பை புற்றுநோய் உள்ளது என்பது கண்டறியப்பட்டு, அவற்றை வகை I மற்றும் வகை II எண்டோமெட்ரியல் புற்றுநோயாக அவை வரையறுக்கப்பட்டன. குறிப்பாக ஸ்ட்ரெய்ட்னர் பயன்படுத்துபவர்களுக்கு கேன்சர் வரும் அபாயம் அதிகமாக இருப்பது இந்த ஆய்வின்மூலம் தெரியவந்துள்ளது. இருப்பினும், மற்ற தலைமுடி தயாரிப்புகளை பயன்படுத்துவது கருப்பை புற்றுநோய் அபாயத்தை அதிகரிப்பதாக காணப்படவில்லை.
அதேசமயம், முடி தயாரிப்புகளால் பெண்களுக்கு வரக்கூடிய கருப்பை புற்றுநோய் விகிதமும், மாதவிடாய் நின்ற மற்றும் எண்டோமெட்ரியல் புற்றுநோய் மற்றும் மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட கருப்பை புற்றுநோய் விகிதமும் ஒரேமாதிரியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

அதேபோல், உடலுழைப்பு அதிகமாக உள்ள பெண்களைவிட, உடலுழைப்பு குறைவாக உள்ள பெண்களே ஸ்ட்ரெய்னர்களை அதிகம் பயன்படுத்துவதும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கருப்பை புற்றுநோய் என்றால் என்ன?

எண்டோமெட்ரியல் மற்றும் கருப்பை சர்கோமா ஆகிய இரண்டு புற்றுநோய்களை உள்ளடக்கியது கருப்பை புற்றுநோய் என்கிறது க்ளீவ்லேண்ட் கிளினிக். பிறழ்ந்த செல்கள் வளர்ந்து கட்டுப்பாட்டை மீறி பலுகி பெருகி, பெரிய கட்டியை உருவாக்குவதே கருப்பை கேன்சர் கட்டிகள் எனப்படுகிறது என்கின்றனர் நிபுணர்கள். உடலின் மற்ற இடங்களில் உருவாகும் கேன்சர் கட்டிகளும் இதேபோன்று பிறழ்ந்த செல்களால்தான் உருவாகின்றன.

image

கருப்பை புற்றுநோய் அறிகுறிகள்

கருப்பை புற்றுநோய் வந்தவர்களுக்கு பல்வேறு அறிகுறிகள் தென்படும். அவற்றில் சில,

  • மாதவிடாய் நேரங்கள் தவிர பிற நேரங்களிலும் பிறப்புறுப்பில் ரத்தம் வழிதல்
  • மெனோபாஸ் நிலைக்கு பிறகும் பிறப்புறுப்பில் ரத்தம் வெளிப்படுதல்
  • அடிவயிறு வலி அல்லது இடுப்புப்பகுதியில் பிடிப்பு
  • மெல்லிய வெள்ளை அல்லது வெள்ளைப்படுதல்
  • நீண்ட நாட்களுக்கு, அதீத அல்லது அடிக்கடி பிறப்புறுப்பில் ரத்தம் வழிதல்
போன்றவை கருப்பை புற்றுநோயின் முக்கிய அறிகுறிகள் என்கின்றனர் மருத்துவர்கள். இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவேண்டும்.

THANKS-PUTHIYATHALAIMURAI

Post a Comment

0 Comments