Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

சிரிப்பின் மகத்துவம்...!


ISசிரிப்பு என்பது சிநேகத்திற்கான முதல் தூது. இறுக்கமான சூழ்நிலையை இணக்கமாக்க உதவுவது. மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பகிரங்க அடையாளமே சிரிப்பு. சிரிக்கத் தெரிந்த ஒரே இனம் மனித இனம் தான். ஆரோக்கியத்திற்கான பல்வேறு சுவைகளில் நகைச்சுவையும் ஒன்று. நிச்சயமாக அவனே (மனிதனை) சிரிக்க வைக்கிறான்.
(அல் குர்ஆன் 53:43).

சிரித்து மகிழ்வோடு இருப்பதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைகிறது என்பது ஜப்பான் பல்கலைக்கழக சமீபத்திய ஆய்வு. மேலும் இது இரத்த அழுத்தத்தை குறைத்து நரம்பு தொகுதிக்கு புத்துயிர் அளித்து தசை பிடிப்புகளை தளர்த்தி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதுடன் இருதயத்தையும் பலப்படுத்துகிறது என்பது நிபுணர்களின் கூற்று.

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் ஏறிச்செல்ல ஒரு வாகனம் கேட்டார். அதற்கு நபியவர்கள் உம்மை ஒட்டகத்தின் குட்டியின் மீது ஏற்றிவிடுகிறேன் என்றார்கள். அதற்கு அம்மனிதர் இறைதூதர் (ஸல்) அவர்களே! ஒட்டகக்குட்டியை வைத்து நான் என்ன செய்வது? என்று கேட்டதற்கு எந்த ஒட்டகமும் தாய் ஒட்டகத்தின் குட்டித்தானே என்றார்கள் (புன்னகை பூக்க).
(ஆதாரம்: அபூதாவூத், திர்மிதி).

உனது சகோதரனை மலர்ந்த முகத்துடன் நீ சந்திப்பதும் தர்மமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி), ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: திர்மிதி).

நடுநிலையோடு சிரிப்பதையே (புன்னகை) மார்க்கம் வலியுறுத்துகிறது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு போதும் ஒரேயடியாக தமது உள் நாக்குத் தெரியும் அளவுக்கு சிரிக்க நான் கண்டதில்லை. அவர்கள் (பெரும்பாலும்) புன்னகை புரிபவர்களாகவே இருந்தார்கள். (ஆதாரம்: புஹாரி)

இவ்வாறு கூறும் உன்னத மார்க்கம் உலகில் இஸ்லாத்தை தவிர வேறெதுவும் இல்லை.

Post a Comment

0 Comments