Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

எங்கு காணினும் மனக்கவலை.. இந்த ஆன்சைட்டியை போக்க என்ன வழி? அறிகுறிகள் என்ன?

 

கஷ்டமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் போது எழும் அமைதியின்மையும், பாதுகாப்புமின்மையும்தான் ஆன்சைட்டி எனும் மனப்பதற்ற உணர்வு ஏற்படுகிறது. இது உடலுக்கு மிகப்பெரிய பிரச்னையையே விளைவிக்கிறது.

பொதுவாக கடினமான சூழல்கள் அது முடிவுறும்போது மறைந்துவிட்டாலும் அதனால் ஏற்படும் இதயத் துடிப்பு, மனப் பதற்றம் உள்ளிட்ட மனநிலை சார்ந்த அறிகுறிகள் மிகவும் வேதனையானதாகவே இருக்கும். ஆகவே இந்த பிரச்னைகளின் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகள் என்னவென்பதை அறிந்துக்கொள்வது மிக்க அவசியமானதாகும்.

அவை என்னனென்ன என்பதை காணலாம்:

ஆன்சைட்டி அட்டாக்கிற்கான காரணங்கள் என்ன?

குடும்பம் அல்லது உறவு சிக்கல்கள்:

குடும்பத்திலோ அல்லது காதலர்கள், தம்பதியர்கள் இடையேயான பிரச்சனைகள் ஒரு நபரின் மனதை நீண்ட நேரம் துன்பத்தில் வைத்திருக்கச் செய்திருக்கிறது. இதனால் அந்த நபர் மனக்கவலைத் தாக்குதலுக்கு ஆளாகுவார்.

image

நாள்பட்டநோய்:

நீண்டகாலமாக இருக்கும் உடல்நலப் பிரச்சினைகள், அதன் பக்க விளைவுகளால் ஏற்படும் வலியும் ஒருவருக்கு கவலையை அளிக்கிறது. ஏனெனில் நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் சிகிச்சை, அதன் செலவு மற்றும் உடல்நலம் தொடர்பான பிற அம்சங்களைப் பற்றி அதிகளவில் கவலைக்கொள்கிறார்கள்.

பணி நிமித்தமான அழுத்தம்:

அலுவலகம் உள்ளிட்ட பணியிடத்தில் கடினமான சூழ்நிலைகள் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு அது தனிநபரின் கவலையையும் தூண்ட வல்லது. நிறைய வேலைகளை முடிக்க வேண்டிய அழுத்தம் இருப்பதால் தனிப்பட்ட வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்க விடாமல் செய்துவிடும்.

ஆன்சைட்டி அட்டாக் அறிகுறிகள்:

ஓய்வெடுக்காமல் முடியாமல் தவிப்பது:

ஆன்சைட்டியால் அவதிப்படுபவர்கள் ஒருபோதும் தங்கள் மனதை அமைதிப்படுத்திக்கொள்ளவும், ஓய்வெடுக்கவும் முடியாமல் இருப்பார்கள். இது brain fog அல்லது மூளைக்கு அதிக வேலை கொடுப்பது போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

நம்பிக்கையை எதிர்ப்பார்ப்பது:

மன பதற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போதும் மற்றவர்களிடம் ஆறுதல் தேட முயற்சிப்பார்கள். நம்பிக்கையைத் தேடிச் செல்வது ஒருபோதும் முடிவடையாது என்பதை அவர்கள் உணராமல் இருப்பார்கள்.

image

அச்ச உணர்வு:

சின்ன சின்ன பிரச்னைகள் கூட சிலருக்கு பேரழிவுகளை தரும் பல நிகழ்வுகளாக இருக்கும். அப்படி நினைப்பவர்கள் மோசமானவற்றுக்கு பயப்படத் தொடங்குவார்கள். ஒருகட்டத்தில் கவலை தாக்குதல்களால் பாதிக்கப்படுவார்ர்கள்.

மனக்கவலை தாக்குதல்களை எவ்வாறு தடுப்பது?

ஆரோக்கியமான உணவு:

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் மனக்கவலை அதிகரிப்பதற்கு முக்கிய பங்காற்றுகின்றன. ஆகவே ஜங்க் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதை விடுத்து நல்ல ஆரோக்கியமான பழங்கள், காய்கறிகள், புரதங்கள் நிறைந்த இறைச்சிகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

உங்கள் சமூக வட்டத்தை அதிகரிக்கவும்:

நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். உங்கள் அன்புக்குரியவர்களுடன் வெளியே செய்து உங்கள் கவனத்தைத் திசைதிருப்புங்கள். இது கவலை தாக்குதல்களைத் தடுக்க உதவும்.

புதிய பொழுதுபோக்குகளைத் தொடரவும்:

புதிய செயல்பாடுகளில் அல்லது பொழுதுபோக்கு அம்சங்களில் மனதை ஈடுபடுத்துவதால் சிறிது காலத்திற்கு மனக் கவலையின் சிரமத்திலிருந்து மீள உதவும். ஆக்வே புத்தகம் வாசிப்பது, தோட்டக்கலை, நடனம், வரைவது அல்லது விளையாட்டு பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.

Post a Comment

0 Comments