Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

கோதுமை மா விலை குறைப்பும் பிரீமாவின் அறிவிப்பும்...!

 

ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 290 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதி மற்றும் விநியோகத்தர்கள் சங்கம் நேற்று (14) அறிவித்தது.

எனினும், தமது நிறுவனம் 50 கிலோகிராம் கொண்ட ஒரு மூடை கோதுமை மாவை 14,150 ரூபாவிற்கே தொடர்ந்தும் விற்பனை செய்வதாக பிரீமா நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் காணப்படும் டொலர் பிரச்சினை காரணமாக தொடர்ச்சியாக தேவைக்கு ஏற்ற அளவு கோதுமை மாவினை வழங்க முடியாத நிலை தோன்றியுள்ளதாக பிரீமா நிறுவனம் அறிவித்துள்ளது.

எனினும், ஒரு கிலோகிராம் கோதுமை மாவை 283 ரூபா வீதமே விற்பனை முகவர்களுக்கு தாம் தொடர்ந்தும் விநியோகித்து வருவதாக பிரிமா நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார்.

கோதுமை மாவினை இறக்குமதி செய்து விநியோகிக்கும் வர்த்தகர்களே மாவின் விலையை அண்மையில் அதிகரித்திருந்ததாக தெரிவித்த அவர் தமது நிறுவனம் விலையில் எவ்வித மாற்றத்தையும் செய்யவில்லை என சுட்டிக்காட்டினார்.

பிரீமாவின் விற்பனை முகவர்கள் 14,150 ரூபாவிற்கு ஒரு மூடை மாவை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரீமா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வௌிநாடுகளில் இருந்து கோதுமை மா இறக்குமதி செய்பவர்களே மாவின் விலையை குறைத்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் N.K.ஜயவர்தன தெரிவித்தார்.

ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையை 250 ரூபாவில் இருந்து 450 ரூபா வரை அதிகரித்து விற்பனை செய்தவர்களே தற்போது 290 ரூபா வரை குறைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் உள்ள கோதுமை மா நிறுவனங்கள் தொடர்ந்தும் ஒரே விலையில் விற்பனை செய்வதாகவும், அவர்கள் விலை குறைக்கும் பட்சத்தில் பாணின் விலையை குறைக்க முடியும் எனவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் N.K.ஜயவர்தன குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments