Motion sickness என்றால் என்ன?
கண்கள், காதுகள் மற்றும் உடல் அனுப்பும் தகவல்களை மூளை சரியாக புரிந்துகொள்ளாதபோது இந்த இயக்க பிரச்னை ஏற்படுகிறது. கார், விமானம், படகு மற்றும் பூங்கா விளையாட்டுகளின்போது அதிக இயக்கங்கள் இருப்பதால் வயிற்றில் தொய்வு, ஈரமான அல்லது உடம்பு சரியில்லாத நிலை உருவாகிறது. சிலருக்கு இதனால் வாந்தியும் வருகிறது. கீழ்க்கண்ட சில காரணங்களால் சிலருக்கு இயக்க பிரச்னை உருவாகிறது.
- பரம்பரை பிரச்னை
- ஹார்மோன் சமநிலையின்மை
- காது பிரச்னை
- மாதவிடாய்
- பார்கின்சன் நோய்
- தீவிர தலைவலி மற்றும் ஒற்றை தலைவலி
- கர்ப்பம்
Motion sickness காரணிகள்
உடலின் இயக்க உணர் பகுதிகளான கண்கள், காதுகள், தசைகள் மற்றும் மூட்டுகளுக்கு வெளிப்புற இயக்கத்தினால் கலவையான சிக்னல்கள் மூளைக்கு அனுப்பப்படும்போது மூளை தகவல்களை புரிந்துகொள்வதில் குழப்பம் ஏற்படுகிறது. இதனால் நீங்கள் தொடர்ந்து இயக்கத்தில் இருக்கிறீர்களா? அல்லது ஒரே இடத்தில் இருக்கிறீர்களா என்பதை புரிந்துகொள்ள முடியாமல் போகிறது.
இயக்க பிரச்னைக்கான காரணிகள் பல இருந்தாலும், கீழ்க்கண்ட இவை மிகவும் முக்கியமானவையாக கருதப்படுகிறது.
- பொழுதுபோக்கு பூங்கா விளையாட்டுகள்
- இயக்கத்தின்போது படித்தல்
- படகு, கார், பேருந்து, ரயில் அல்லது விமான பயணம்
- வீடியோ கேம்ஸ் மற்றும் திரைப்படங்கள்
Motion sickness - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
இயக்க பிரச்னைகளை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது என்றாலும், சில எளிய வழிகளை பின்பற்றுவதன்மூலம் அதனைக் கட்டுப்படுத்தலாம்.
ஜன்னலை திறந்துவைக்கவும் - நிறைய நேரங்களில் இயற்கை காற்று இயக்கப் பிரச்னையை குறைக்கும். எனவே கார்களில் பயணிக்கும்போது ஜன்னலை திறந்துவைத்து சுத்தமான காற்று உள்ளே வர அனுமதிக்கவேண்டும். நிறைய நேரங்களில் நீண்ட பயணத்தின்போது வாகனம் இயக்கத்தில் இருக்கும்போதே உணவு சாப்பிடுவோம். இதனால் அந்த வாசனை வெளியே போகாமல் உள்ளேயே சுழலும். எனவே இதனை தவிர்க்கவேண்டும். மேலும், லாவண்டர் அல்லது மிண்ட் போன்ற வாசனை திரவியங்களை கார்களில் வைப்பது சிறந்தது என்கின்றனர் நிபுணர்கள்.
ஹெவி உணவுகளை தவிர்க்கவும் - நீண்ட பயணம் செல்வதற்கு முன்னால் காரமான, பொறித்த அல்லது அதிக உணவை எடுத்துக்கொள்ளக்கூடாது. இது இயக்க பிரச்னையை உருவாக்கும்.
இஞ்சி கொண்டு செல்லுங்கள் - குமட்டலை கட்டுப்படுத்துவதில் இஞ்சியின் பங்கு அளப்பரியது. எனவே பயணிக்கும் போது துருவிய இஞ்சி அல்லது இஞ்சி மாத்திரைகளை கொண்டு செல்வது சிறந்தது.
முன்பக்க சீட்டில் அமருங்கள் - முடிந்தவரை வாகனத்தின் முன்பகுதியில் அமர்வதாலும் அல்லது வாகனத்தை நீங்களே ஓட்டிச் செல்வதாலும் இயக்க பிரச்னைகள் வராமல் தடுக்கும். தொலைதூரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கி பயணிக்கும்போது உடல் இயக்கமும், மூளைக்கு செல்லும் சிக்னலும் குழப்பம் அடையாது. முன்பக்க சீட்டில் அமரும்போது ஜன்னல் அளவு மற்றும் பார்வை அளவு அதிகமாக இருப்பதுடன், குலுங்கலும் குறைவாக இருக்கும்.
ப்ரேக் எடுக்கவும் - எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை ப்ரேக் எடுத்து வாகனத்தில் பயணிப்பது சிறந்தது. குறிப்பாக மலைப் பிரதேசங்களிலோ அல்லது நிறைய வளைவுகள் இருக்கும் பகுதியிலோ பயணிக்கும்போது இடைவெளி விட்டு பயணிப்பது நல்லது.
0 Comments