ஜெய்க்கா நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியம் ஆகியவற்றால் 144 மெட்ரிக் தொன் சோள விதைகள் இன்று(22) விவசாய அமைச்சிடம் கையளிக்கப்படவுள்ளது.
பெரும்போக சோள உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், இந்த சோள விதைகள் நன்கொடையாக கிடைக்கவுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் ஜயந்தா இளங்கக்கோன் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் தூதரகத்தில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதி ஹனா சிங்கர், இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் சோள விதைகளை கையளிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த சோள விதைகள் மொனராகலை மற்றும் அம்பாறை மகாவலி வலயத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக 2,900 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
0 Comments