Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

2 ஆவது சுற்றுக்கு செனகல் முன்னேறியது...!

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் 2 ஆவது சுற்றுக்கு செனகல் அணி தகுதிபெற்றுள்ளது.

இன்று நடைபெற்ற குழு ஏ அணிகளுக்கு இடையிலான போட்டியொன்றில் ஈக்வடோர் அணியை 2:1 கோல்களால் வென்றதன் மூலம் செனகல் அணி தனது 2 ஆவது சுற்று வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொண்டது.

இக்குழுவில் ஏற்கெனவே தென் அமெரிக்க நாடான ஈக்வடோர் 4 புள்ளிகளையும் ஆபிரிக்க நாடான செனகல் 3 புள்ளிகளையும் பெற்றிருந்தன.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் வென்றதன் மூலம் செனகலின் மொத்தப் புள்ளிகள் 6 ஆக அதிகரித்தன. இதனால் குழு ஏ இல் 2 ஆம் இடம் பெற்ற செனகல் 2 ஆவது சுற்றுக்கு முன்னேறியது.

Post a Comment

0 Comments