Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இந்தியாவில் 26 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம் - பின்னணி என்ன?

புதிய தகவல் தொழில்நுட்ப விதி 2021ன் படி, மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ் அப்-பில் இந்தியாவில் மட்டும் 26 லட்சத்துக்கும் அதிகமான போலிக் கணக்குகளைத் தடை செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் மொத்தமாக 500 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட வாட்ஸ் அப், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் 23 லட்சத்திற்கும் அதிகமான மோசடி செய்யும் கணக்குகளைத் தடை செய்திருந்தது. இதனை தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் திருத்தப்பட்ட புதிய ஐடி விதிகள் 2021ன் கீழ், மேலும் 26 லட்சத்துக்கும் அதிகமான கணக்குகளை தடை செய்துள்ளது.

இதுகுறித்து வாட்ஸ் அப் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுவது, ‘ எங்களது பயனாளிகளுக்குச் சிறந்த சேவை தருவது மட்டும் எங்களது நோக்கம் இல்லை. கூடவே பாதுகாப்பான சேவை உறுதி செய்வதும் எங்களது கடமை.



அதன்படி, பயனர்களிடமிருந்து பெற்றப்பட்ட நெகடிவ் பின்னூட்டம், ஸ்பேம், தேவையில்லாத விளம்பரங்கள், மோசடி புகார்கள் கொடுக்கப்பட்ட கணக்குகள் மற்றும் ஆபாச செய்திகள் புகைப்படங்கள் அனுப்பும் கணக்குள், பயனர்கள் ப்ளாக் செய்த கம்பெனி விளம்பர கணக்குகளை தடை செய்துள்ளோம்.



இவை அனைத்து திருத்தப்பட்ட ஐடி விதிகளின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள். எங்களது தொழில்நுட்ப வல்லுநர்கள், தரவு விஞ்ஞானிகள், நிபுணர்கள் கொண்ட குழு , எங்களது பயனாளர்களுக்குபாதுக்காப்பான செயலி சேவையை வழங்குவதில் தொடர்ந்து இயங்கிக்கொண்டு இருக்கிறார்கள்” என்றார்

Post a Comment

0 Comments