அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 271 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
50 ரூபாவிற்கும் அதிக விலையில் முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்பவர்களைக் கண்டறிய தொடர்ந்தும் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுவதாக அதிகார சபை குறிப்பிட்டது.
அத்துடன், முட்டைகளை மறைத்து வைத்திருந்த 22 வர்த்தகர்களுக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
43 முதல் 45 ரூபாவுக்கு இடைப்பட்ட விலைகளில் முட்டை விற்பனை செய்யப்பட வேண்டுமென குறிப்பிட்டு நுவர்வோர் விவகார அதிகார சபையினால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments