Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு வயிற்றுக் கோளாறு…!

பாகிஸ்தானுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள இங்கிலாந்துக்கு கிரிக்கெட் வீரர்கள் பலருக்கு வயிற்றுக்கோளாறு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி நாளை வியாழக்கிழமை பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் குழாத்தினருடன் அவர்களின் பிரத்தியேக சமையல் நிபுணரும் பிரிட்டனிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளார்.

எனினும், அணித்தலைவர் பென் ஸ்Nடுhக்ஸ் உட்பட வீரர்கள் பலருக்கு வயிற்றுக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனால், இங்கிலாந்து பாகிஸ்தான் அணித்தலைவர்கள் வெற்றிக்கிண்ணத்துடன் போஸ் கொடுக்கும் நிகழ்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பென் ஸ்டோக்ஸ் உட்பட இங்கிலாந்து வீரர்கள் செவ்வாய்க்கிழமை பயிற்சியில் ஈடுபட்டபோது - AFP photo

இது தொடர்பாக இங்கிலாந்து, வேல்ஸ் கிரிக்கெட் சபை விடுத்துள்ள அறிக்கையில், இங்கிலாந்து அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் உட்பட வீரர்கள், பணிக்குழாத்தினர் பலருக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஹோட்டலில் தங்கியிருந்து ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து வீரர்கள் உணவு நஞ்சாகியமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

16 பேர் கொண்ட குழாமில் சுமார் அரைவாசி பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments