இந்தியா மற்றும் நியூசிலாந்து இரு அணிகளும் டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி சுற்றுடன் வெளியேறிய பிறகு விளையாடப்போகும் முதல் தொடர் இதுவாகும்.
நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. டி20 போட்டி அணிக்கு ஹர்திக் பாண்டியாவும், ஒரு நாள் அணிக்கு ஷிகர் தவானும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி, வெலிங்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு நடக்கிறது.
அண்மையில் இவ்விரு அணிகளும் டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி சுற்றுடன் வெளியேறிய பிறகு விளையாடப்போகும் முதல் தொடர் இதுவாகும். அந்த ஒரு தோல்வியால் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வரும் இவ்விரு அணிகளும், இந்த தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் களம் காண்பதால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், அஷ்வின் ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா தலைமையில் களம் காணும் இளம் படை சாதிக்க காத்திருக்கிறது. சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சுப்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் பேட்டிங்கில் மிரட்ட காத்திருக்கிறார்கள். அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், உம்ரான் மாலிக் உள்ளிட்டோர் பந்து வீச்சில் பலம் சேர்க்கிறார்கள்.
அதேநேரத்தில் நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் சாய்ப்பது அத்தனை எளிதல்ல. நியூசிலாந்தின் சிறிய மைதானங்களில் ரன் வேட்டை நடத்த முடியும். வெலிங்டன் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமானது.
அணி விபரம்
இந்தியா: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன்/விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஸ்ரேயாஸ் அய்யர், உம்ரன் மாலிக், புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், சாஹல், இஷான், அர்ஷ்தீப், ஹூடா, சிராஜ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷல், சூரியகுமார், ஷூப்மன்.
நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஃபின் ஆலன், பிரேஸ்வெல், கான்வே (விக்கெட் கீப்பர்), ஃபெர்கூசன், ஆடம், டாரியல், நீஷம், பிலிப்ஸ்(விக்கெட் கீப்பர்), சான்ட்னர், ஈஷ் சோதி, சவுத்தீ, டிக்னெர்
0 Comments