அதில் இருந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக கோப்பை போட்டி நடந்து வருகிறது. இரண்டாம் உலக போர் காரணமாக 1942 மற்றும் 1946-ம் ஆண்டுகளில் போட்டி நடைபெறவில்லை. கடைசியாக உலக கோப்பை போட்டி 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்தது. இதில் பிரான்ஸ் 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. 22-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா ஆசிய கண்டத்தில் உள்ள கத்தாரில் நாளை (20-ந் தேதி) கோலாகலமாக தொடங்குகிறது.
டிசம்பர் 18-ந் தேதி வரை 29 நாட்கள் இந்த கால்பந்து திருவிழா நடக்கிறது. இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் கத்தார் மட்டும் நேரடியாக தகுதி பெற்றது. மீதியுள்ள 31 நாடுகள் தகுதி சுற்று மூலம் நுழைந்தன. இந்த 32 நாடுகளும் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் விவரம்:- கத்தார், ஈக்வடார், செனகல், நெதர்லாந்து ('ஏ' பிரிவு), இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ் (பி), அர்ஜென்டினா, சவுதி அரேபியா, மெக்சிகோ, போலந்து (சி), பிரான்ஸ் ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா (டி), ஸ்பெயின், கோஸ்டாரிகா, ஜெர்மனி, ஜப்பான் (இ), பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா (எப்), பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன் (ஜி), போர்ச்சுக்கல், கானா, உருகுவே, தென் கொரியா (எச்). ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். டிசம்பர் 2-ந் தேதியுடன் 'லீக்' ஆட்டங்கள் முடிகிறது.
இதன் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றான நாக்அவுட்டுக்கு தகுதி பெறும். டிசம்பர் 3 முதல் 6-ந் தேதி வரை 2-வது சுற்று நடைபெறும். இதில் 16 நாடுகள் விளையாடும். அதில் இருந்து 8 அணிகள் கால் இறுதிக்குள் நுழையும். டிசம்பர் 9 மற்றும் 10-ந் தேதிகளில் கால் இறுதியும், 13 மற்றும் 14-ந் தேதிகளில் அரை இறுதி ஆட்டங்களும் நடைபெறும். இறுதிப் போட்டி டிசம்பர் 18-ந் தேதி நடக்கிறது. பிரேசில் அதிகபட்சமாக 5 முறை உலக கோப்பையை வென்றுள்ளது.
அதற்கு அடுத்தப்படியாக ஜெர்மனி, இத்தாலி தலா 4 முறையும் அர்ஜென்டினா, பிரான்ஸ், உருகுவே தலா 2 முறையும், இங்கிலாந்து, ஸ்பெயின் தலா 1 முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. 4 முறை சாம்பியனான இத்தாலி இந்த முறையும் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. உலக கோப்பையை கைப்பற்ற ஐரோப்பியா- தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும். இதனால் யார் உலக கோப்பையை வெல்லப் போகிறார்கள் என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.
லியோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), லெவன்டோஸ்கி (போலந்து), எம்பாப்பே (பிரான்ஸ்), ரொனால்டோ (போர்ச்சுக்கல்), கெவின் டு புருயின் (பெல்ஜியம்), கரீம் பென்சிமா (பிரான்ஸ்), நெய்மர் (பிரேசில்), ஹாரிகேன் (இங்கிலாந்து), மோட்ரிச் (குரோஷியா) போன்ற உலகின் தலைசிறந்த வீரர்கள் முத்திரை பதிக்கும் வகையில் ஆடுவார்கள். தொடக்க நாளில் ஒரே ஒரு ஆட்டம் நடக்கிறது. 'ஏ' பிரிவில் உள்ள கத்தார்-ஈக்வடார் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. முன்னதாக இரவு 7.30 மணிக்கு பிரமாண்ட தொடக்க விழா தோகாவில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அலகோர் அல்பயத் ஸ்டேடியத்தில் நடக்கிறது.
தொடக்க விழாவில் பிரபல பி.டி.எஸ். பாடகர் ஜங்குக் மற்றும் அமெரிக்க குழுவான ஐட்பீஸ் ஆகியோர் பங்கேற்கிறார்கள். இங்கிலாந்து பாடகர் பதேகி வில்லியம்ஸ், நோரா பதவி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். கொலம்பிய பாடகி ஷகிரா தொடக்க விழாவில் கலந்து கொள்ள இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் விலகினார். உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஏற்கனவே சாம்பியன் பட்டம் வென்ற அணி உலக கோப்பையை வெல்லுமா? அல்லது புதிய அணி கோப்பையை கைப் பற்றுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஸ்கர் அலி - பத்திரிகையாளர்
திண்டுக்கல் மாவட்டம் - தமிழ்நாடு
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
0 Comments