Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

அமெரிக்க தேர்தலில் கடும் போட்டி....!

அமெரிக்க இடைத்தவணைத் தேர்தலில், செனட் சபைக்குக் கடும் போட்டி நிலவுகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில் இறுதியாக வெளியான முடிவுகளின்படி செனட் சபையில் குடியரசுக் கட்சி ஏற்கனவே உள்ள 29 இடங்களுடன் 18 இடங்களை வென்றுள்ளது. அதனிடம் இப்போது 47 இடங்கள் உள்ளன.

ஜனநாயகக் கட்சி, ஏற்கனவே உள்ள 36 இடங்களுடன் தற்போது 12 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதற்கு இப்போது செனட் சபையில் 48 இடங்கள் உள்ளன.

இடைத்தவணைத் தேர்தலுக்கு முன்னர் செனட் சபை ஜனநாயகக் கட்சியின் வசம் இருந்தது.

தற்போது போட்டி நடைபெறும் 35 இடங்களில் குடியரசுக் கட்சியின் கரம் மேலோங்கினால் ஜனாதிபதி ஜோ பைடனின் திட்டங்களைச் செயல்படுத்த முடியாமல் போகும். அது 2024ஆம் ஆண்டு வரக்கூடிய அடுத்த ஜனாதிபதி தேர்தலைப் பாதிக்கக்கூடும்.

மக்களவையைப் பொறுத்தவரை, மொத்தமுள்ள 435 இடங்களுக்குப் போட்டி நடைபெறுகிறது. அவற்றில் 172 இடங்கள் ஜனநாயக் கட்சி வசம் சென்றுள்ளன. 197 இடங்களைப் பிடித்து குடியரசுக் கட்சி முன்னணியில் இருப்பதாக கடைசி முடிவுகள் கூறுகின்றன.

மக்களவை, செனட் சபையோடு சில மாநிலங்களின் ஆளுநர்கள், மாநிலச் செயலாளர்கள், மாநிலத் தலைமைச் சட்ட அதிகாரிகளையும் அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.

Post a Comment

0 Comments