Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பிரான்ஸில் தமிழர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை...!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிராந்தியத்தில் வர்த்தகர்களை இலக்கு வைத்து கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு அவரிடம் இருந்து பணம் மற்றும் நகைகள் பறிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்லின் மாவட்டத்திற்குட்பட்ட நகரம் ஒன்றில் இச்சம்பவ இடம்பெற்றுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் சிகரெட் விற்பனை வர்த்தகத்தில் ஈடுபட்டுவர் தனது வீடு நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது திடீரென அவ்விடத்திற்கு வந்த நபர் ஒருவர் ஆயுத முனையில் கடத்தப்பட்டுள்ளார்.

பின்னர் அவரது விற்பனை நிலையத்தில் உள்ள பெட்டகத்தில் இருந்து 50,000 யூரோக்கள் பணம் சூறையாடப்பட்டுள்ளது. அத்தோடு அவரது வீட்டில் இருந்து €100,000 யூரோக்கள் மதிப்புள்ள நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி வர்த்தகர் முகத்தில் தாக்கப்பட்டு மயங்கிய நிலையில் கொள்ளையர்கள் அவரை விட்டு தப்பிச் சென்றனர். பின்னர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது, மேற்படி கடத்தல் மற்றும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது வர்த்தகருக்கு நெருக்கமானவர் என தெரியவந்துள்ளது.

விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. இதேவேளை, கடைகளை நடத்தும் தமிழ் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் யாராவது மர்ம நபர்கள் அல்லது நெருக்கமாக செயற்படுபவர்கள் தங்களை பின் தொடர்கின்றார்களா என்பது தொடர்பில் எப்போதும் விழிப்புடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களாக பாரிஸில் கொள்ளை சம்பவம் தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments