Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இந்தோனேஷியா 5.6 ரிக்டர் பூகம்பத்தினால் 331 பேர் உயிரிழந்தமை உறுதி...!

இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் இன்று சனிக்கிழமை பாரிய பூகம்பம் ஏற்பட்டது. மேற்கு ஜாவா மாகாணத்திலுள்ள பான்ஜார் நகருக்குத் தெற்குகே 18 கிலோமீற்றர் தூரத்தில் இப்பூகம்பம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க பூகோளவியல் அளவையியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்பூகம்பம் 6.4 ரிக்டர் அளவுடையதாக பதிவாகியதாகவும் 118 கிலோமீற்றர் ஆழத்தில் இப்பூகம்பம் ஏற்பட்டதாகவும் இந்தோனேஷியாவின் பூகோள பௌதிகவியல் முகவரகம் தெரிவித்தது.

இப்பூகம்பத்தனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. கடந்த நவம்பர் 21 ஆம் திகதி இதே மாகாணத்தில் ஏற்பட்ட 5.6 ரிக்டர் பூகம்பத்தினால் 331 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.a

Post a Comment

0 Comments