கனடாவில் பெருந்தொகை கோவிட் தடுப்பூசிகள் விரயமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெருந்தொற்று அவசர நிலைமைகளில் அரசாங்கம் கோவிட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்தமையில் தவறில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தடுப்பூசி விரயத்தை வரையறுப்பதற்கு கனேடிய பொதுச் சுகாதார முகவர் நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2022ம் ஆண்டு மே மாதம் வரையில் கனேடிய அரசாங்கம் 169 மில்லியன் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசாங்கத்தினால் 84 மில்லியன் தடுப்பூசிகளை நாடு முழுவதிலும் மக்களுக்கு ஏற்றப்பட்டுள்ளது. 85 மில்லியன் தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments