21ஆம் நூற்றாண்டின் பாரிய விஞ்ஞானத் திட்டம் ஒன்று நேற்று (05) தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவில் ஆரம்பிக்கப்பட்டது.
சதுர கிலோமீற்றர் அணி என்று அழைக்கப்படும் இந்தத் திட்டம் 2028 ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்படும்போது அது உலகில் மிகப்பெரிய வானொலித் தொலைநோக்கியாக பதிவாகவுள்ளது.
தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவில் பிரிக்கப்பட்டு நிர்மாணிக்கப்படும் இந்தத் தொலைநோக்கியின் தலைமையகம் பிரிட்டனில் அமையவுள்ளது. இதன்மூலம் வானியல் உலகின் பெரும் கேள்விகளுக்கு விடை காண எதிர்பார்க்கப்படுகிறது.
ஐன்ஸ்டைன் கோட்பாடுகள் மட்டுமன்றி வேற்றுக்கிரக உயிரினங்கள் பற்றிய ஆய்வுக்கு இந்தத் தொலைநோக்கி பயன்படுத்தப்படவுள்ளது.
மேற்கு அவுஸ்திரேலியாவின் தொலைதூர மர்சிசன் ஷிர் மற்றும் தென்னாபிரிக்காவின் கேப் டவுனின் க்ரூங்கில் நேற்று நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் இந்தத் திட்டத்திற்கு தலைமை ஏற்றுள்ள எட்டு நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
0 Comments