அபுதாலிப் சதகா அமைப்பின் மற்றுமொரு நன்கொடை
அநுராதபுர மாவட்டம், கம்பிரிகஸ்வெவ பிரதேசத்தில் வரிய குடுபம் ஒன்றிட்கு வீடு ஒன்றை நிர்மானித்து கையளிக்கும் வைபவம் அன்மையில் 26-08-2023 சனிக்கிழமை வெகு விமர்சியாக நடைபெற்றது. மேற்படி வீட்டுத்திட்டத்திற்கான பூரண நன்கொடை கொழும்பை சேர்ந்த காலம்சென்ற உவைஸ் மொஹமட் ஷியாம் அவர்களின் குடும்பத்தினரால் வழங்கப்பட்டது.
மேற்படி வீட்டை சங்கத்தின் செயலாளர் அல்ஹாஜ் ஏ.எச்.எம்ஆரிப் அவர்களினால் கையளிக்ப்பட்டதுடன், விழாவிற்கு விசேட விருந்தினர்களாக தம்பிரிகஸ்வெவ ஜும்ஆ பள்ளி தலைவர் இல்யாஸ் அவர்களும், தம்பிரிகஸ்வெல முன்னால் பிரதேச சபை உறுப்பினர் இஸ்மாயில் அஷ்ரப் அவர்களும்தம்பிரிகஸ்வெல திடீர் மரண விசாரனை அதிகாரி ரில்வான் அவர்களும், பரஸன்கஸ்வெவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அன்வர் அவர்களும், அபுதாலிப் சதகா அமைப்பின் அங்கத்தவர்கள், பள்ளி நிருவாகிகள், உலமாக்கள், ஊர் ஜமாத்தினர் கலந்து சிறப்பித்தனர்.
மேற்படி வீட்டின் கட்டுமான வேலைகளை சமூக சேவையாளரும் நிர்மான பணியாளருமான ஹஸன் இர்ஷாட் அவர்களின் ஒத்துழைப்புடனும் மேற்கொள்ளப்பட்டது.
தகவல் : அல்ஹாஜ் ஏ.எச்.எம். ஆரிப் (செயலாளர்)
தகவல் : அல்ஹாஜ் ஏ.எச்.எம். ஆரிப் (செயலாளர்)
0 Comments