மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராட் பகுதியில் இன்று காலை 11 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.3ஆக பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குளுங்கின. பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதனால், ஏராளமானோர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.
இதைதொடர்ந்து, ஹெராட் பகுதிக்கு விரைந்த மீட்பு படையினர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். 78 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மத்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்னும் பலர் மாயமாகியுள்ள நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் கூறுகையில், “ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய நகரமான ஹெராட்டில் இருந்து வடமேற்கே 40 கி.மீ (25 மைல்) தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து 5.5, 4.7, 6.3, 5.9 மற்றும் 4.6 ரிக்டர் அளவுகளில் ஐந்து நில அதிர்வுகள் ஏற்பட்டது” என்றது.
0 Comments