இந்த மோதலை நிறுத்த அரசாங்கங்களும் சர்வதேச அமைப்புகளும் உத்தியோகபூர்வ அறிக்கைகள் மூலம் அழைப்பு விடுத்துள்ளன.
ஹெவன்லி கலாச்சாரம் உலக அமைதி ஒளியின் மறுசீரமை, தென் கொரியாவை தலைமையிடமாகக் கொண்ட ஒரு சர்வதேச அரசு சாரா அமைப்பு,ஐக்கிய நாடுகள் பொருளாதாரம் ,சமூக கவுன்சில் மற்றும் சியோல் பெருநகர அரசாங்கத்துடன் இணைந்து இஸ்ரேல் - ஹமாஸ் மோதலை நிறுத்த ஒரு அறிக்கையை வெளியிட்டது.
கலாச்சாரம் உலக அமைதி ஒளியின் மறுசீரமைப்பின் மூன்றாவது முறையான அதிகாரப்பூர்வ அறிக்கை இதுவாகும்.
இந்த அறிக்கையில் எச்.டபிள்யூ.பி.எல் கருத்து முன்வைக்கையில் மோதலில் பலியாவது அப்பாவி மக்கள் தான். நியாயமற்ற போரை நிறுத்தத் தவறினால் பல உயிர்களும் சொத்துக்களும் சேதமடையும். இத்தகைய அழிவுகரமான செயல்களுக்கு யாராவது ஈடுசெய்ய முடியுமா? என கூறியுள்ளார்.
கலாச்சாரம் உலக அமைதி ஒளியின் மறுசீரமைப்பு அறிக்கையில் இரு தரப்பினரும் மோதலை உடனடியாக நிறுத்தவும், குடிமக்களைப் பாதுகாக்கவும், மீட்பு மற்றும் அமைதிக்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடவும் ஐ.நா. மற்றும் சர்வதேச சமூகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
இரு தரப்பினருக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை கொண்டு வருவதற்கு மத்தியஸ்தம் செய்வது மற்றும் மனிதாபிமான ஆதரவை வழங்குவது போன்ற தேவையான நடவடிக்கைகள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளது.
நன்றி...
வீரகேசரி
0 Comments