Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget


அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின்  காத்தான்குடி கிளையின் ஏற்பாட்டில் இரு பெரும் விழாக்கள்ஞாயிற்றுக்கிழமை (03) ஜம் இய்யாவின்  தலைவா் அஷ்ஷெய்க் ஏ.எம்.ஹாறூன் (றஷாதி) தலைமையில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையின் மண்டபத்தில் நடைபெற்றன.



காத்தான்குடி ஜம்இய்யாவில் இதுவரை தலைவா்களாக, செயலாளா்களாக மற்றும் பொருளாளர்களாகப் சேவையாற்றிய உலமாக்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கி  கௌரவிக்கப்பட்டதோடு, 2020 ஆம் ஆண்டு தொடக்கம் 2023 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியினுள் பட்டம் பெற்ற இளம் ஆலிம்களை அறிமுகம் செய்யும் நிகழ்வும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் ஜம்இய்யதுல் உலமா சபையின் மூத்த உலமாக்கள், இளம் உலமாக்கள் ஊடகவியலாளா்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments