காஸாவின் கடற்பகுதிக்கு சென்றுள்ள ஸ்பெயினை சேர்ந்த ஓபன் ஆர்ம்ஸ் என்ற முதலாவது மனிதாபிமான கப்பல் பொருட்களை தரையிறக்கியுள்ளது.
பட்டினியின் பிடியில் காஸா சிக்குண்டுள்ளதாக ஐநா எச்சரித்துள்ள நிலையில் சைப்பிரசிலிருந்து இந்த கப்பல் 200 தொன் மனிதாபிமான பொருட்களுடன் புறப்பட்டது.
காஸாவிற்குள் தரைமார்க்கமாகவும் ஆகாயமார்க்கமாகவும் மனிதாபிமான பொருட்களை விநியோகிப்பது கடினமானதாக காணப்படுகின்ற நிலையில் இந்த முயற்சி இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உணவுகளை வழங்கிய வேர்ல்ட் சென்ரல் கிட்ச்சன் ஐக்கிய அரபு இராச்சியத்தின் உதவியுடன் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
காஸாவில் இயங்கும் துறைமுகம் இ;ல்லாததால் தற்காலிக இறக்குதுறையொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 Comments