Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் நேரங்கள்...!


நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் நேர காலங்கள் தொடர்பில் அறிவித்துள்ளார்கள். அந்த வகையில்

‘அதானுக்கும் இகாமத்திற்கும் மத்தியில் கேட்கப்படும் பிரார்த்தனை நிராகரிக்கப்பட மாட்டாது’ என அன்னார் குறிப்பிட்டுள்ளார்கள். 

 (ஆதாரம்- திர்மிதி: 212).

அதேபோன்று, ஒவ்வொரு இரவிலும், இரவின் மூன்றில் ஒரு பகுதி எஞ்சி இருக்கும் போது அல்லாஹ் கீழ் வானத்திற்கு இறங்குகின்றான், ‘என்னிடத்தில் யாரும் பிரார்த்திப்பவர் இருக்கின்றாரா? அவரது பிரார்த்தனையை நான் ஏற்றுக்கொள்கின்றேன், என்னிடத்தில் யாரும் கேட்கக்கூடியவர்கள் இருக்கின்றார்களா? அதை நான் அவருக்குக் கொடுத்து விடுகின்றேன், என்னிடத்தில் பாவமன்னிப்புத் தேடுபவர்கள் இருக்கின்றார்களா? அவர்களது பாவங்களை நான் மன்னித்து விடுகின்றேன். பஃஜ்ரு உதயமாகும் வரை இது நிகழ்ந்து கொண்டிருக்கும்’ எனவும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(ஆதாரம்- ஸஹீஹுல் புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம்).

ஒரு அடியான் அல்லாஹ்விற்கு மிக சமீபமாக இருக்கும் சந்தர்ப்பம் அவன் ஸுஜூதில் இருக்கும் சந்தர்ப்பமாகும். எனவே அந்த நேரத்தில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள். பிரார்த்தனையில் ஆர்வம் காட்டுங்கள். உங்கள் பிரார்த்தனையை அவன் ஏற்றுக்கொள்வான்’ எனவும் அன்னார் கூறியுள்ளார்கள். (ஆதாரம்- ஸஹீஹுல் புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம்).

இதேபோன்று பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் இன்னும் பல சந்தர்ப்பங்கள் இருப்பதையும் நபி (ஸல்) அவர்கள் எடுத்துக்கூறியுள்ளார்கள். அவற்றில் நோன்பாளி நோன்பு துறக்கும் நேர காலத்தில் கேட்கும் பிரார்த்தனையும் அடங்கும். ஆகவே பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் நேர காலங்களை உச்சளவில் பயன்படுத்திக் கொள்வதில் ஒவ்வொருவரும் அதிக சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றில் தற்போதைய நோன்பு துறக்கும் வரையான நேரகாலம் குறிப்பிடத்தக்கதாகும்.

முப்தி எ.எச்.எம் மின்ஹாஜ்
(காஷிபி, மழாஹிரி) நிந்தவூர்

Post a Comment

0 Comments