மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச அல்-குர்ஆன் போட்டி 44 வது வருடமாக சவூதி அரேபியாவின் புனித மக்கா நகரில் நடைபெற்றது.
பெருமாண்டமான பரிசுத்தொகை மற்றும் போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்ற அனைவருக்கும் 5 நட்சத்திர விடுதிகள், போக்குவரத்து ஆகிய அனைத்தும் வழங்கப்பட்டன. உன்மையில் அல்-குர்ஆனை சும்ந்தவர்களுக்குள் போட்டித் தன்மையை உருவாக்கும் நோக்கிலும் ஏனைய இளம் சிறார்கள் அல்-குர்ஆனை மனனம் செய்வதற்கு ஊக்கப்படுத்தும் வகையில் இவ் அல்-குர்ஆன் போட்டி நடைபெற்றது.
அல்-குர்ஆனை மனனம் செய்வதை ஊக்குவிக்கும் நோக்குடன் அதன் போதனைகளை உலகமயப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இப்போட்டியில் கலந்து கொண்டவர்களின் கருத்துக்கள் பலரது கவனத்தை ஈர்த்தன. குறிப்பாக அல்-குர்ஆன் கல்வியை புறந்தள்ளிவிட்டு உலகக் கல்வி தான் அவசியம் எனும் நிலைப்பாட்டை கொண்டிருக்கும் காலத்தில் அல்-குர்ஆனன உடையவர்கள் கண்ணியப்படுத்தப்டுவது வரவேற்கத்தக்கது. பல மில்லியன் ரியால் பரிசுத்தொகையுடன் சகல வசதிகளையும் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டன.
அல்-குர்ஆன் மனனம் மாத்திரம் அல்லாமல் அதன் தப்ஸீர் மற்றும் ஓதும் பல முறைகள் (கிறாஅத்) போன்றவைகளையும் போட்டியின் முதல் பிரிவு காணப்பட்டது. எவ்வித பாகுபாடும் இல்லாமல் உலகின் பல பாகங்களில் இருந்து போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டது போன்று நடுவர்களும் பல நாடுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டிருந்தது. அனைத்து நடுவர்களும் தகுதிவாய்ந்த ஏழு கிறாஅத் கற்கை நெறிகளை பூர்த்தி செய்து இஜாஸா பெற்றவர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments